தக் லைஃப் படத்தில் கமலுக்கு மூன்று வேடமா? ஆனா அவரு ஒண்ணுமே சொல்லலையே!..

Thug life
கமல், மணிரத்னம் கூட்டணி 34 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் வருவதால் ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய விருந்தாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. படத்தின் பெயர் தக் லைஃப் என அறிவித்த அந்த நாளில் இருந்தே அதன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தைப் பற்றியும் அவ்வப்போது அப்டேட்கள் வந்தவண்ணம் உள்ளன.
எதுவுமே அப்டேட்கள் வராவிட்டாலும் சும்மா ஒரு குண்டைத் தூக்கிப் போடுவோமே, கிளப்பி விடுவோமே என சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். முதலில் படத்தில் கமல் நாயகன் போல தாதா வேடத்தில் நடிப்பார் என்று பேசப்பட்டது. அதன்பிறகு படத்தில் கமலுக்கு இரட்டை வேடம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது 3 மாறுபட்ட வேடங்களில் நடித்து மிரட்டப்போகிறார் என்றும் தகவல்கள் வருகின்றன. ஆனால் இது உண்மையா என்று கேட்டால் சொல்ல முடியாது. ஏன்னா படக்குழுவினரிடம் இருந்து இதுபற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வரவில்லை.
படத்தில் ஏ.ஆர்.ரகுமான் மியூசிக் என்பதும் படத்தில் அதிக எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி உள்ளது. கமல், மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் திரையில் என்னென்ன மேஜிக் எல்லாம் செய்யப்போகிறார்களோ என்ற ஆவல் கலந்த பரவசம் ஒவ்வொரு ரசிகனுக்குள்ளும் இருந்து வருகிறது. அதே நேரம் இந்தப்படம் உலகளாவில் பேசப்படும் என்றும் மிகப்பெரிய வெற்றியைத் தரும் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ARRKLMR
கமல்ஹாசனின் பன்முகத்தன்மை பற்றி இப்போது பாமர ரசிகர்களுக்கும் புரிந்து விட்டது. அதனால் அவர்கள் கூட படத்தில் கமல் ஏதாவது வித்தியாசம் காட்டுவாரா என்று எதிர்பார்த்துத் தான் திரையரங்கிற்கே வருவார்கள். கமலின் 234வது படம் இது. அவருடன் இணைந்து திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.
இதையும் படிங்க... கல்கி படத்தில் தனி முத்திரை பதிக்கப் போகும் கமல்!.. இதற்குதானா இந்த விஷப்பரீட்சை!
மணிரத்னமும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளனர். குறிப்பாக அலைபாயுதே, பம்பாய், இருவர், கன்னத்தில் முத்தமிட்டால், செக்கச்சிவந்த வானம், காற்று வெளியிடை, குரு, உயிரே ஆகிய படங்கள் வந்துள்ளன. எல்லாப் படங்களிலும் பின்னணி இசையும், பாடல்களும் மாஸ் தான். அதே எதிர்பார்ப்புடன் தான் தக் லைஃப் படமும் வருகிறது. இதில் கமலும் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளதால் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மிரட்டுமா இந்தக்கூட்டணி என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.