இந்த நடிப்பெல்லாம் எனக்கு தெரியாது… சிவாஜியிடம் செமையாக வாங்கிக்கட்டிய பத்மினி…
May 13, 2024, 19:40 IST
Sivaji Ganesan: நடிகர் சிவாஜி கணேசன் என்னும் மாபெரும் கலைஞனானதுக்கு அவருடைய அர்ப்பணிப்பு முக்கிய காரணம். அப்படி இருப்பவர் தன்னுடைய படத்தில் ஒருவரை அடிப்பது போல காட்சி இருந்தால் அதை நடிப்புக்காக செய்ய மாட்டாராம். ஒரிஜினலாகவே செய்து அழுக விட்டு இருக்கிறார். ஒரு படத்தில் அடிப்பது போன்ற காட்சிகள் இருந்தால் அதில் உடன் நடிப்பவர்களிடம் முன்கூட்டியே தெரிவித்துவிடுவார்களாம். தான் அடிக்கும்போது எப்படி விலக வேண்டும் என்பதை விளக்கிவிட்டே நடிக்க தொடங்குவாராம். அவர் சரியாக ஓங்கும் சமயத்தில் அத்தனை வேகம் இருக்குமாம். ஒதுங்காமல் போனால் அடி விழுவது உறுதியாம். சில நடிகர்கள் அவர் சொன்னதை செய்துவிடுவார்கள். இதையும் படிங்க: குடும்பமா சேர்ந்து அசிங்கப்படுத்திட்டாங்களா… கோபியை வெளியேத்த முடிவெடுத்த எழில்… ஆனால் சிலர் அதனை தவறவிட்டு நிஜமாகவே அடி விழுந்த சம்பவங்களும் உண்டு. இதில் நடிகை பத்மினிக்கு நடந்தது முக்கிய சம்பவம் தான். சிவாஜியின் ஒரு படத்தில் அவரின் காதலியாக வரும் பத்மினி சந்தர்ப்ப சூழ்நிலையால் சித்தியாகி விடுவார். முதலில் வருந்தும் சிவாஜி உணர்ச்சி வசப்பட்டு அவரிடம் நெருங்குவார். அன்னை ஸ்தானத்தில் இருப்பவரிடம் இப்படி நடந்துக்கொள்ள வரும் சிவாஜியை அவர் அடிப்பது போல காட்சிகள் இருக்கும். இதனால் சிவாஜியை உடனே பத்மினி அறைந்துவிடுவாராம். அதுவும் போலியாக இல்லாமல் தத்ரூபமாக செய்தாராம். அந்த காட்சியில் இயக்குனர் கட் சொல்லியும் சிவாஜியை விடாமல் பத்மினி அடித்து இருக்கிறார். அவருக்கு காய்ச்சலே வந்துவிட்டதாம். இதையும் படிங்க: ரஜினிகாந்த் படத்துக்கு காலை உடைத்துக்கொண்டு வந்து நின்ற ரகுவரன்… எந்த படத்துக்கு தெரியுமா?
பத்மினியை அடுத்த காட்சிக்கு படக்குழு தேடியது. பார்த்தால் தனியாக ஒரு அறையில் உட்கார்ந்து இருந்தாராம். நடிக்க கூப்பிட்டால் வலி உயிர் போகிறது. அழுதுவிட்டு தான் வருவேன் என மறுத்துவிட்டார். அழுது முடித்த பின்னரே மீண்டும் படப்பிடிப்பில் கலந்து நடித்து கொடுத்தார். இன்னமும் விளையாட்டுப் பிள்ளை படத்தில் அந்த காட்சியை பார்த்தாலும் கம்மல் தெறித்து விழுவது அப்படமாக தெரியும்.
இருந்தும் காட்சி தத்ரூபமாக வேண்டும் என்பதால் சிவாஜி கோபமே படவில்லையாம். இதே பத்மினிக்கு இன்னொரு சம்பவமும் நடந்ததாம். கிட்டத்தட்ட இதை ரிவென்ஜ் என்றே சொல்லலாம். விளையாட்டு பிள்ளை திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பத்மினி கன்னத்தில் அடிக்க வேண்டும். ஆனால் சிவாஜி அடித்ததில் பத்மினி காது தோடு கழண்டு போய் வேறு அறையில் விழுமாம். ஷாட் ஓகேவாகிவிட்டது.
