துணிவு படத்தின் ஹிட்டுக்கு முக்கிய காரணம்… ஆனால் விடாமுயற்சியில் நடக்காமல் போகிடுச்சே…

by Akhilan |
துணிவு படத்தின் ஹிட்டுக்கு முக்கிய காரணம்… ஆனால் விடாமுயற்சியில் நடக்காமல் போகிடுச்சே…
X

Thunivu: அஜித் குமார் நடித்த கடைசியாக ரிலீசான திரைப்படம் துணிவு தான். இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்ட ஒரு விஷயத்தை விடாமுயற்சி திரைப்படத்தில் வைக்க முடியாத சூழல் உருவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்த திரைப்படம் துணிவு. ஒரு நாளில் நடக்கும் கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இப்படம் விஜய்யின் வாரிசு படத்துடன் போட்டியாக கடந்த 2023ம் தைப்பொங்கல் தினத்தில் வெளியாகிய நல்ல வெற்றியையும் பெற்றது.

இதையும் படிங்க: மனோஜ் மற்றும் ரோகிணியை கடையை திறந்தாச்சு… கடுப்பில் ரசிகர்கள்… இதெல்லாம் தேவையே இல்லாத ஆணிதான்!

இப்படத்தில் கதைக்கு இருந்த அதே வரவேற்பு படத்தின் பாடல்களுக்கும் இருந்தது. ஹெச் வினோத் இயக்கிய படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். சில்லா சில்லா, கேங்ஸ்டா, காசே தான் கடவுளடா என்ற மூன்று பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தது. மூன்றுமே ஃபாஸ்ட் பீட் சாங் என்பதால் ரசிகர்களிடம் ஈஸியாக வைரலாகியது.

இது படத்திற்கு பெரிய வரவேற்பை உருவாக்கியது.வெற்றியின் முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அஜித் நடித்துவரும் விடாமுயற்சி திரைப்படத்தில் இந்த ட்ரிக்ஸை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறது. பொதுவாக அஜித்திற்கு மெலோடி பாடல்களை விட ஆலுமா டோலுமா போல ஃபாஸ்ட் பீட் சாங் தான் உடனே ரீச்சை கொடுத்து வருகிறது.

இதையும் படிங்க: கோபியை அழுகவிடும் ராதிகா மற்றும் ஈஸ்வரி… திடீரென தடம் மாறும் ஜெனி… என்ன அடுத்த பிரச்னையா?

ஆனால் விடாமுயற்சி திரைப்படம் ஒரே நாளில் நடக்கும் கதை என்பதால் இந்த பாடல்களை வைக்க இடம் இல்லாமல் இருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருவதால் அவரும் ஃபாஸ்ட் பீட் சாங் கில்லாடி. இருந்தும் இப்படத்திற்கு பெரிய அளவில் அந்த வகை பாடல்கள் உதவி செய்யாது என்றே படக்குழு நினைத்துள்ளனர். இது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தினை கொடுத்துள்ளது.

Next Story