விஜய் பிறந்தநாளுக்கு 2 படம் ரீ ரிலீஸ்!..அட்வான்ஸ் புக்கிங் எத்தனை லட்சம் தெரியுமா?!..

Published on: June 21, 2024
vijay
---Advertisement---

சினிமாவில் ஏற்கனவே ஹிட் அடித்த ஒரு படத்தை சில அல்லது பல வருடங்கள் கழித்து மீண்டும் திரையரங்குகளில் திரையிடுவதையே ரீ ரிலீஸ் என சொல்கிறார்கள். இதை துவங்கியது எம்.ஜி.ஆர் படங்களில் இருந்துதான். அவரின் பல திரைப்படங்கள் பலமுறை ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ஹிட் அடித்திருக்கிறது.

சமீபத்தில் கூட எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் படம் தமிழகத்தில் சில தியேட்டர்களில் புதுப்பொலிவுடன் வெளியானது. எம்.ஜி.ஆரை போலவே சிவாஜி, ரஜினி ஆகியோரின் படங்களும் அவ்வப்போது ரீ ரிலீஸ் ஆவதுண்டு. ரஜினி தயாரித்து நடித்த பாபா திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால், பெரிதாக வசூல் செய்யவில்லை.

இதையும் படிங்க: இது அது இல்ல!.. கோட் படத்தோட செகண்ட் சிங்கிள் சூர்யா படத்தோட காப்பியா?.. முடிச்சிவிட்ட ஃபேன்ஸ்!..

அதேநேரம், கமலின் வேட்டையாடு விளையாடு படம் ஓரளவுக்கு வசூலை பெற்றது. அதேபோல், நடிகர் விஜயின் கில்லி படம் சில நாட்களுக்கு முன்பு சில திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு அவரின் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. முதலில் சில தியேட்டர்களில் மட்டுமே இப்படம் வெளியானது.

ஆனால், ரசிகர்களிடம் இருந்த வரவேற்பை பார்த்த தியேட்டர் அதிபர்கள் சென்னை உள்ளிட்ட பல ஊர்களிலும் அதிக திரையரங்குகளில் கில்லி படத்தை வெளியிட்டனர். சில நாட்களில் இப்படம் 20 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதையடுத்து அப்படத்தின் இயக்குனர் தரணி விஜயை படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க: இன்னைக்கு நைட் யாரும் தூங்கிடாதீங்க!.. கோட் டீசர் க்ளிம்ப்ஸ் வருது!.. அர்ச்சனா கல்பாத்தி அடிபொலி!..

நாளை ஜூன் 22ம் தேதி விஜயின் பிறந்தாள் வருவதால் துப்பாக்கி, போக்கிரி, வில்லு என சில படங்களை ரி ரிலீஸ் செய்யும் வேலைகள் நடந்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில், துப்பாக்கி மற்றும் போக்கிரி படங்களை நாளை பார்ப்பதற்கு திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகிறார்கள்.

துப்பாக்கி படத்தின் டிக்கெட்டுகள் ரூ.32 லட்சத்திற்கும், போக்கிரி படத்தின் டிக்கெட்டுகள் 28 லட்சத்திற்கும் முன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எப்படியும் இந்த 2 படங்களும் சில கோடிகளை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.