Connect with us

Cinema News

100 கோடி ஷேர் கொடுத்த முதல் தமிழ் படம் எது தெரியுமா?.. திருப்பூர் சுப்பிரமணியம் பளிச்!..

படம் நல்லா இருக்கா இல்லையா? என்பதை எல்லாம் தாண்டி ரசிகர்கள் தங்கள் ஹீரோ வசூல் சக்கரவர்த்தியா இல்லையா?  என்கிற மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களை டார்கெட் செய்தே மொக்கை படங்களுக்கும் பில்டப் கொடுத்து முதல் நாள் டிக்கெட்டுக்கு அலைய வைத்து ஒரு வாரம் கழித்து காத்து வாங்கும் நிலைமைக்கு தியேட்டர்களை கொண்டு வந்து விடுகின்றனர்.

இந்த ஆண்டு வெளியான வாரிசு, துணிவு, பொன்னியின் செல்வன் 2 உள்ளிட்ட படங்கள் 200 முதல் 300 கோடி வசூலை ஈட்டிய நிலையில், ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் மற்றும் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ உள்ளிட்ட திரைப்படங்கள் 500 கோடி வசூலை தாண்டி உள்ளன.

இதையும் படிங்க: ‘மங்காத்தா’ படத்தில் முதலில் யார் நடிக்க வேண்டியது தெரியுமா? ஷாக் கொடுத்த பிரபலம்

இரண்டு படங்களும் நல்ல வசூல் வேட்டை நடத்தினாலும் அதில் யார் பெரியவர் என்கிற போட்டித் தான் பிரதானமாக மாறி உள்ளது.

நடிகர் விஜய் நடித்த லியோ படத்துக்கு எதிராக கருத்துக்களை யூடியூப் சேனல்களில் கூறி வரும் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தமிழ்நாட்டில் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு 100 கோடி வரை ஷேர் கொடுத்து அதிக லாபத்தை கொடுத்த படம் என்றால் அது ஜெயிலர் மட்டும் தான் எனக்கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பாபா படம் ஃபிளாப்!.. ரஜினி கேட்ட கேள்வியில் அதிர்ந்து போன லிங்குசாமி!..

இதுவரை வேறு எந்தவொரு தமிழ்ப்படமும் செய்யாத சாதனையை ரஜினிகாந்தின் ஜெயிலர் சாதித்து இருப்பதாக சமீபத்திய பேட்டியில் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார். அந்த படத்திற்கு பிறகு அடுத்த இடத்தில் லியோ இருப்பதாக கூறியுள்ளார்.

நாளை நடைபெற உள்ள லியோ வெற்றி விழாவில் படத்தின் மொத்த வசூல் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு கிடைத்த ஷேர் தொகை உள்ளிட்ட அனைத்தையும் பற்றி தயாரிப்பாளர் லலித் குமார் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top