பாட மாட்டேன் என அடம்பிடித்த டி.எம்.எஸ்!. கெஞ்சி கேட்ட எம்.எஸ்.வி!.. வரிகளை மாற்றிய கண்ணதாசன்!..
தமிழ் சினிமாவில் 60களில் முக்கிய கவிஞராக இருந்தவர் கண்ணதாசன். காதல், தத்துவம் உள்ளிட்ட பல டாப்பிக்குகளிலும் பல பாடல்களை கலந்து கட்டி அடித்தவர். குறிப்பாக இவரை போல தத்துவ பாடல்களை எழுதியவர் யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
எம்.ஜி,ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் பல காதல் மற்றும் தத்துவ பாடல்களை எழுதி இருக்கிறார். மக்களின் வாழ்க்கைக்கு நெருக்கமான விஷயங்களை தனது பாடல் வரிகள் மூலம் காட்டினார் கண்ணதாசன். மரணம், சோகம், விரக்தி, நம்பிக்கை என மனிதர்களின் எல்லா உணர்வுகளையும் தனது பாடல் வரிகளில் பிரதிபலித்தார்.
இதையும் படிங்க: கண்ணதாசன் அழைத்தும் போகாத எம்.எஸ்.வி!… சந்திக்கவே முடியாமல் போன சோகம்!.. அட பாவமே!..
சினிமாவில் இயக்குனர் சொல்வது எப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலை என்றாலும் சரி.. அதற்கு பாடல் எழுதிவிடுவார் கண்ணதாசன். அதனால்தான் 60களில் முன்னணி பாடலாசிரியராக இருந்தார். எம்.ஜி.ஆருடன் இவர் மோதல் போக்கை கடைபிடித்ததால் சிவாஜியின் படங்களுக்கு அதிகம் எழுதினார்.
கவிஞர் கண்ணதாசனின் தத்துவ பாடல்கள் இப்போதும் காற்றில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. எம்.எஸ்.,விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் பாடல் எழுத அதை டி.எம்.சவுந்தரராஜன் தனது கம்பீர குலில் பாட, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அதற்கு அற்புதமான நடிப்பை கொடுக்க கருப்பு, வெள்ளை சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத நினைவுகளாக இருந்தது.
இதையும் படிங்க: கண்ணதாசன் வாங்கிய சத்தியம்!. எம்.ஜி.ஆர் அழைத்தும் போகாத வாலி!.. இது செம மேட்டரு!..
ஒருமுறை எஸ்.எஸ்.ஆர் நடிக்கும் ஒரு படத்தில் காதல் தோல்வியடைந்த ஒருவன் பாடுவது போல ஒரு பாடலுக்கு எம்.எஸ்.வி டியூன் போட கண்ணதாசன் பாடல் எழுதினார். அதில் ‘கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும். அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்’ என எழுதி இருந்தார்.
இந்த வரிகளை படித்து பார்த்த டி.எம்.எஸ் ‘கடவுளை இப்படி திட்டி எழுதினால் நான் பார்க்க மாட்டேன்’ என சொல்லிவிட்டார். எனவே, கண்ணதாசனிடம் சென்ற எம்.எஸ்.வி. ‘காதலில் தோல்வி அடைந்தால் மனிதன்தான் சாவான். கடவுள் எப்படி சாவார். வரிகளை மாற்றிக் கொடுங்கள்’ என கேட்க, ‘அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்’ என மாற்றி கொடுத்தார். அதன்பின் அந்த பாடலை பாடி கொடுத்தார் டி.எம்.எஸ்.