Cinema News
பொங்கல் ரிலீஸ்!.. 500 கோடி வசூலை அள்ளிய டோலிவுட்.. 200 கோடிக்கே முக்கும் கோலிவுட்.. ஆரம்பமே இப்படி?
கடந்தாண்டு பாலிவுட் மற்றும் கோலிவுட் அதிக வசூல் ஈட்டி முதல் இரண்டு இடங்களை பிடித்தது. அதன் பின்னர், மூன்றாவது இடத்தில் தெலுங்கு திரையுலகம் இடம்பெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு டோலிவுட்டின் கை ஆரம்பத்திலேயே ஓங்கியிருப்பது திரையுலகத்தை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த ஆண்டு டோலிவுட்டில் பாலய்யா, சிரஞ்சீவி என சீனியர் நடிகர்கள் படம் தான் வெளியாகின. அதனால், வசூல் ரீதியாக எந்த படமும் பெரிய சாதனையை எட்டவில்லை. கடைசியாக வெளியான பிரபாஸின் சலார் திரைப்படமும் வெறும் 600 முதல் 700 கோடி வசூல் தான் ஈட்டியது.
இதையும் படிங்க: கமல்-ஹெச்.வினோத் திரைப்படத்தின் கதை முக்கிய பிரபலத்தின் பயோபிக்காம்!… ஆனால் தான் இதில் ஒரு ட்விஸ்ட்…
ஆனால், பாலிவுட்டில் ஷாருக்கானின் பதான், ஜவான் மற்றும் டங்கி உள்ளிட்ட படங்கள் 2600 கோடி வசூலை ஈட்டியது. மேலும், அனிமல், 900 கோடி வசூலை, ஆதிபுருஷ் 400 கோடி என வசூல் வேட்டை நடத்தியது.
அதனை தொடர்ந்து கோலிவுட்டில் வாரிசு, லியோ படங்கள் மூலம் விஜய் 900 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் ஈட்டிக் கொடுக்க ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மூலம் 600 கோடி ரூபாயும், பொன்னியின் செல்வன் 350 கோடி வசூலையும், துணிவு படம் 200 கோடி வசூலையும் அள்ளின.
இதையும் படிங்க: தேசிங்கு ராஜா 2 படத்தில் நடிக்கும் புகழ்… ஆனா அவர் கெட்டப்பை கேட்டா அசந்துடுவீங்க
ஆனால், இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட படங்கள் 75 முதல் 80 கோடி வசூலை மட்டுமே ஈட்டியுள்ளன. பெரிதாக இரண்டு படங்களும் வெற்றி விழா கூட நடத்தவில்லை. தெலுங்கில் வெளியான நிலையில், வசூல் வரவில்லை. சமீபத்தில், வெளியான சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 200 கோடி பாக்ஸ் ஆபிஸை தமிழ் சினிமா இதுவரை எட்டியுள்ளது.
தெலுங்கில் இந்த சங்கராந்தியை முன்னிட்டு வெளியான மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் 200 கோடி வசூலையும் அதற்கு போட்டியாக வெளியான ஹனுமான் படம் 300 கோடி வசூலையும் ஈட்டி ஒட்டுமொத்தமாக 500 கோடி அள்ளி ஆரம்பத்திலேயே அசத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஆத்தாடி இத்தனை கோடியா?!.. ஜெயிலரை தாண்டிய லால் சலாம்!.. செம ஜாக்பாட்தான்!…