Connect with us

Cinema History

மக்கள் மனதில் இடம்பிடித்த மறக்க முடியாத தமிழ் சினிமா நடிகைகள்

நயன்தாரா

தமிழ்சினிமாவின் நம்பர் 1 நடிகை யாரென்றால் இவர் தான். 2005ல் ஐயா படத்தில் அறிமுகமான இவர் சந்திரமுகி படத்தில் செம மாஸ் நடிகையானார். கோபம், பாசம், காதல், ஆச்சரியம், வெட்கம், டான்ஸ் என அனைத்து வகையான அம்சங்களிலும் அம்சமாக நடிக்கும் நடிகை இவர் தான்.

இவரது நடிப்பில் ராஜா ராணி, ஆரம்பம், இது கதிர்வேலன் காதல், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், விஸ்வாசம், பிகில், அறம், நெற்றிக்கண் ஆகிய படங்கள் இவரது அபார நடிப்புக்கு உதாரணமாகச் சொல்லலாம்.

இன்று வரை லேடி சூப்பர்ஸ்டார் இவர் தான். தமிழ் தவிர தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் நயன்தாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்கா ஷெட்டி

anushka shetty

2006ல் ரெண்டு என்ற படத்தின் மூலம் மாதவனுடன் இணைந்து நடித்து அறிமுகமானார். நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதை அம்சம் கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்து நடித்தார். இவரது அழகான சிரித்த முகத்தோற்றம் ரசிகர்களிடம் தனி அந்தஸ்தை உருவாக்கியது.

அருந்ததி படம் இவரது புகழை பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்தது. பில்லா, வேட்டைக்காரன், அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 3, தெய்வத்திருமகள், இரண்டாம் உலகம், பாகுபலி 2 என எந்தப் படத்தில் நடித்தாலும் தனக்கென தனி முத்திரையை அழுத்தமாக பதித்து விடுகிறார். தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளங்களையும் தனது புன்சிரிப்பால் அள்ளி விடுகிறார்.

திரிஷா

trisha

சாமி படம் இவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது. என்றென்றும் புன்னகை படத்தில் பிரியா கேரக்டரில் வந்து ரசிகர்களின் மனதைப் பறித்து விடுகிறார். அதே போல விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஜெஸ்ஸி கேரக்டரில் வந்து ரசிகர்களைத் தூங்க விடாமல் செய்து விடுகிறார். அதே போல பூலோகம் படத்தில் வந்து ஜெயம் ரவியுடன் இணைந்து அமர்க்களப்படுத்தி விடுகிறார்.

மொத்தத்தில் இவரது படங்கள் என்றால் பார்ப்பதற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. மங்காத்தா, சகலகலா வல்லவன், என்னை அறிந்தால், கொடி, அரண்மனை 2, நாயகி, 96, பேட்ட ஆகிய படங்களிலும் இவரது நடிப்பைக் கண்டு ரசிக்கலாம்.

ஹன்சிகா

hansika

இவரது வளர்ச்சி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் இருந்தது. 2011ல் தனுஷ_டன் இணைந்து நடித்து மாப்பிள்ளை படத்தில் அறிமுகம் ஆனார். வேலாயுதம், எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை ஆகிய படங்களில் நடித்து அசத்தினார்.

2013ல் இவரது நடிப்பில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, சேட்டை ஆகிய படங்கள் இவருக்கென்று தனி ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கியது. மான் கராத்தே, வாலு, வேட்டை மன்னன், அரண்மனை என இவருக்கு வரிசையாக படங்கள் வந்த வண்ணம் இருந்தன.

சமந்தா

samantha

இவரது சிரிப்பு நாம் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும் நிச்சயம் கவரும். தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்தது வரை ரசிகர்கள் இவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் தற்போது இவரது இணையதளவாசிகள் இவருக்கு சமூக வலைதளங்களில் சரியான பெயரை வாங்கித் தந்து மிகவும் பிரபலமாக்கி விட்டனர்.

இவர் படத்தில் தலையைக் காட்டினாலே போதும். படம் வெற்றி தான் என்ற நிலைக்கு வளர்ந்து விட்டார் சமந்தா. 2016ல் பாணா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். தெறி, தங்கமகன், கத்தி, 24 ஆகிய படங்களில் இவரது நடிப்பு அபாரம்.

காஜல் அகர்வால்

kajal agarwal

பாலும், வெண்ணையும் கலந்து உருட்டி எடுத்த உருண்டை தான் காஜல் அகர்வால். மும்பை வரவு என்பதால் மக்கள் மத்தியில் தனி அந்தஸ்து கிடைத்தது. ஆல் இன் ஆல் அழகுராஜா இவரது கேரியரில் மறக்க முடியாத படம். இது 2013ல் வெளியானது.

அதன்பின் ஜில்லா படம் விஜய் ஜோடி என்றதும் ரசிகர்களை இவர் யார் என ஒரு நிமிஷம் நின்று பார்க்க வைத்தது. சிங்கம், மாற்றான், மாரி, துப்பாக்கி, விவேகம், மெர்சல் படங்களில் தனித்திறனைக் காட்டினார்.

அமலா பால்

amala paul

சிந்து சமவெளி, மைனா, வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி படங்கள் இவரது நடிப்பில் நம்மை திரும்பிப் பார்க்க வைத்தன. இருந்தாலும், விஜயுடன் இவர் இணைந்து நடித்த தலைவா, ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த நிமிர்ந்து நில், தனுஷ_டன் இணைந்து நடித்த வேலை இல்லா பட்டதாரி, விக்ரமுடன் இணைந்து நடித்த தெய்வத்திருமகள் ஆகிய படங்கள் நம்மை ரசிக்க வைத்தன.

வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய படங்கள் இவருக்கு மேலும் புகழை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தன.

தமன்னா

tamanna

வியாபாரியில் அறிமுகம் ஆன போது இவரை யாருக்குமே தெரியாது. காரணம் படமும் ஹிட்டாகவில்லை. அதன் பின்னர் கல்லூரி என்ற படத்தில் நடித்தார். அதுவும் பிளாப் ஆனது. ராசியில்லாத நடிகை என பெயர் எடுத்தார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் தனுஷ_டன் இணைந்து படிக்காதவன் படத்தில் நடித்து பட்டையைக் கிளப்பினார். அதன் பின் சூர்யாவுடன் இணைந்து அயன் படத்தில் நடித்தார்.

விஜயுடன் இவர் சுறா படத்தில் இணைந்து நடித்தார். அஜீத்துடன் இவர் இணைந்து நடித்த வீரம், ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, ராஜமௌலி இயக்கத்தில் மெகா பட்ஜெட் படம் பாகுபலி, கார்த்தியுடன் இணைந்து நடித்த பையா படங்கள் இவர் பேர் சொல்பவை.

தர்மதுரை, பாகுபலி 2, தேவி, கத்தி சண்டை ஆகிய படங்கள் சுமார் ரகங்கள். தனது நளினமான நடன அசைவுகளால் ரசிகர்களின் இரவுத் தூக்கத்தைக் கலைத்து விடுவதில் வல்லவர். புதுப்புது நடிகைகளின் வரவால் தனது மார்க்கட்டை ஒரு கட்டத்திற்கு மேல் தக்க வைக்க முடியாமல் சமூக வலைதளங்களில் கவர்ச்சியை வாரி இறைக்க ஆரம்பித்துவிட்டார்.

சுருதிஹாசன்

shruthihassan

உலக நாயகனின் மகள் என்ற அந்தஸ்தோடு களம் இறங்கினாலும் சரி. அனைத்துத் துறைகளிலும் தந்தையைப் போல் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பதை நிரூபிக்கும் வகையில் ரவுண்டு கட்டி அடிக்கிறார்.

பாடகி, இசை, ஆல்பம், நடிப்பு என தனித்திறன்களால் தமிழ், தெலுங்கு, இந்தி என பன்மொழிகளிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். இவரது நடிப்பில் 3, ஏழாம் அறிவு, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்பட பல படங்கள் இவரை ஏறிட்டுப் பார்க்க வைத்தன.

பிரியா ஆனந்த்

priya anand

வாளிப்பான உடல் அழகு தான் இவரது பிளஸ் பாயிண்ட். யாராவது இவரை ஒருமுறை பார்த்து விட்டால் போதும். அவர்களுக்கு இவரது வசீகர உடல் அழகு சொக்க வைத்து அவர்களை இவர் பக்கம் சுண்டி இழுத்து விடும். அப்பேர்ப்பட்ட அழகை தனது விலைமதிப்பில்லா சொத்தாக வைத்து இருப்பவர்.

இவருக்கு என்று இளம் ரசிகர்கள் வட்டம் உள்ளது. இவரது நடிப்பில் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி, இரும்புக்குதிரை, திரிஷா இல்லன்னா நயன்தாரா உள்பட பல படங்கள் இவருக்கு என்று தனி முத்திரையைப் பதித்தன. தமிழ், தெலுங்கு, இந்தி என ரவுண்டு கட்டி அடிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

google news
Continue Reading

More in Cinema History

To Top