கே.பாலசந்தருக்கே வேலை இல்லைனு சொன்ன டாப் ஹிட் நடிகர்… கடைசியில் அவர் இயக்கத்திலே நடித்த சுவாரஸ்ய கதை..!

by Akhilan |
கே.பாலசந்தருக்கே வேலை இல்லைனு சொன்ன டாப் ஹிட் நடிகர்… கடைசியில் அவர் இயக்கத்திலே நடித்த சுவாரஸ்ய கதை..!
X

K.Balachandar: தமிழ் சினிமாவில் டாப் ஹிட் நடிகர்களை உருவாக்கி பெருமையை கொண்டவர் பாலசந்தர் தான். அவர் வாய்ப்பு கொடுக்காத நடிகர்களே இல்லை. ஆனால் அவருக்கே ஒரு நடிகர் உங்களுக்கு வேலை இல்லை என்று கூறிய சம்பவம் நடந்து இருக்கிறதாம்.

1964ம் ஆண்டு திரைக்கதை ஆசிரியராக சினிமாவுக்கு வந்தவர் பாலசந்தர். அவர் நீர்குமிழி படத்தின் முலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். கிட்டத்தட்ட சினிமாவில் 50 வருடம் தன்னுடைய ஆட்சியை நடத்தியவர். திரை வாழ்க்கையில் 100 படங்களுக்கு மேல் இயக்குனராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் இருந்து இருக்கிறார்.

இதையும் படிங்க: ராம்சரணுக்கும் பெப்பே… தனுஷுக்கும் பெப்பே… லியோவில் நடந்த திடீர் ட்விஸ்ட்..!

அவர் திரை வாழ்க்கையில் 9 தேசிய விருதுகள், 11 தமிழ்நாடு மாநில விருது, 5 நந்தி விருது, 13 பிலிம்பேர் விருதுகளை பெற்று இருக்கிறார். மேலும் நாகேஷ், சுஜாதா, கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஜெயபிரதா, ஸ்ரீதேவி, ஜெயசுதா, சரிதா, ரேணுகா, நாசர், பிரகாஷ் ராஜ், ரமேஷ் அரவிந்த் மற்றும் விவேக் ஆகியோரை வளர்த்த பெருமையை கொண்டவர்.

அவர் தனது தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா புரொடக்‌ஷனில் கீழ் பல படங்களை தயாரித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்களைத் தயாரித்தார். கடைசியாக திரை வாழ்வில் பிரசாந்தினை வைத்து பார்த்தாலே பரவசம் மற்றும் விமலா ராமனை வைத்து பொய் படங்களை இயக்கியவர்.

இதையும் படிங்க: ஜெயிலர் வடை வாயன்களுக்கு.. நல்லா வயிறு எரியட்டும்டா.. லியோ படைத்த சாதனை.. ப்ளூ சட்டை மாறன் ஜால்ரா!..

இத்தனை சிறப்புக்கு சொந்தக்காரரான கே.பாலசந்தர் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஒரு நிறுவனத்துக்கு வேலை தேடி விண்ணப்பம் போட்டு இருக்கிறார். ஆனால் அவருக்கு பதில் கடிதமாக நீங்கள் அப்ளே செய்தது போல ஒரு வேலை இங்கு இல்லை. அப்படி வேலை வரும் போது தெரிவிக்கிறோம் என பதில் வந்து இருந்தது.

அந்த கடிதத்தில் கையெழுத்து போட்டு இருந்தது நடிகர் ஜெமினி கணேசன். அப்போது அவர் கேஸ்டிங் டைரக்டராக இருந்தாராம். பின்னர் பாலசந்தர் இயக்குனர் ஆனதும் அவர் படத்தில் அதிகம் நடித்த நடிகரும் இவர் தானாம். தனக்கு வாய்ப்பு கொடுக்காத நடிகருக்கு தான் நான் அதிகம் வாய்ப்பு கொடுத்ததாக பல இடங்களில் கூறி இருக்கிறார் பாலசந்தர்.

Next Story