ஆளவந்தான் படத்திற்கு நோ சொன்ன முன்னணி இசையமைப்பாளர்... ஆச்சரிய தகவல்
கமல் நடிப்பில் வித்தியாசமாக அமைந்த படம் ஆளவந்தான். இப்படத்தில் முதலில் வேறு ஒரு முன்னணி இசையமைப்பாளரிடம் வாய்ப்பு வந்தும் அவர் நோ சொல்லியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஆளவந்தான் திரைப்படத்தினை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். 2001ம் ஆண்டு வெளியான இப்படம் எஸ். தாணுவால் தயாரிக்கப்பட்டது. 1984ல் கமல்ஹாசன் எழுதிய தயம் நாவலின் தழுவலாக தான் இப்படம் அமைந்தது. கமல் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
பெரும்பாலும், இரட்டை கதாபாத்திரமாக நாயகன் நடிக்கும் படங்களில் இன்னொரு வேடம் டூப் போட்டே எடுக்கப்படும். ஆனால் இப்படத்தில் கமல் இருமுறையும் அவரே தனித்தனியாக நடித்திருந்தார். இதனால் இருமுறை செட் போடப்பட்டது. தொடர்ந்து, படத்தின் பொருட்செலவும் அதிகமாகியது.
இதையும் படிங்க: அடேங்கப்பப்பா….!!! இந்த அற்புதமான பாடல்களை எல்லாம் கமலா பாடினார்…!!!
ஆளவந்தான் திரைப்படம் வணிகரீதியாக வெற்றி பெறவில்லை. இருந்தும் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது. சங்கர் மகாதேவனுடன், ஈசன் நூரனி மற்றும் லாய் மெண்டோன்சா இணைந்து இசையமைத்திருந்தனர்.
முதலில் இப்படத்தின் இசையமைப்பிற்கு ஹாரிஸ் ஜெயராஜை தான் தயாரிப்பாளர் தாணு அணுகி இருக்கிறார். முதல் படமே கமலின் படம் என வியந்தாலும் அமைதியாகவே இருந்திருக்கிறார் ஹாரிஷ். ஏற்கனவே, மின்னலே படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டு விட்டேன். இப்போது நான் ஆளவந்தான் படத்தில் பணிபுரிய ஒப்புக்கொண்டால் மின்னலே படத்தில் இசையமைக்க முடியாது. அதனால், இந்த வாய்ப்பு தனக்கு வேண்டாம் என மறுத்து விட்டாராம். நேர்மை தான் முக்கியம் என ஹாரிஷ் மின்னலே படத்திற்கு இசைமைத்து கொடுக்க பாடல்கள் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.