Cinema News
டிவியில் டி.ஆர்.பி களைகட்டும் 10 திரைப்படங்கள்.. முதலிடம் பிடித்த ஜெய்பீம்!..
முன்பெல்லாம் சினிமா பார்க்க வேண்டுமெனில் மக்கள் தியேட்டர்களுக்கு மட்டுமே போக வேண்டும். அதனால்தான் 1940 முதல் 50 வருடங்கள் மிகவும் செழிப்பாக இருந்தது. ஒருகட்டத்தில் தொலைக்காட்சிகளின் அதிக்கம் அதிகரிக்க துவங்கியது. பாக்கியராஜின் படங்களுக்கு தியேட்டருக்கு போய் மேட்டனி ஷோ போய் பார்த்த பெண்கள் வீட்டில் சீரியல்களில் மூழ்கினார்கள்.
ஒருபக்கம், தியேட்டருக்கும் வரும் புதிய திரைப்படங்கள் ஒரு மாதத்திலேயே தொலைக்காட்சிகளுக்கு வந்துவிடுகிறது. இப்போது அதை விட ஓடிடி முன்னேறிவிட்டது. தியேட்டரில் வெளியாகி 3 வாரத்தில் புதிய படங்கள் அமேசான் பிரைம், சோனி, நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களுக்கு வந்துவிடுகிறது.
இதையும் படிங்க: சத்யராஜிடம் இப்படி ஒரு வேண்டுகோளை விடுத்த விஜய்சேதுபதி! கட்டப்பா மனசு வைப்பாரா?
சென்னை போன்ற நகரங்களில் குடும்பத்துடன் சினிமா பார்க்க ஒரு தியேட்டருக்கு போனால் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் வேண்டும். சிறு நகரங்களில் ரூ.500 வேண்டும். ஆனால், டிவியில் குடும்பத்துடன் ஜாலியாக அமர்ந்து வீட்டிலேயே பார்க்கிறார்கள். இத்தனைக்கும் தியேட்டரில் பார்த்த பல படங்கள் டிவியிலும் அதிக வரவேற்பை பெற்று நல்ல டி.ஆர்.பியை பெற்றிருக்கிறது.
அந்த வகையில் கலைஞர் டிவியில் எப்போது போட்டாலும் நல்ல டி.ஆர்.பியை பெரும் டாப் 10 படங்கள் பற்றி பார்ப்போம். 10வது இடத்தில் கார்த்தி நடித்த சர்தார் படம் இருக்கிறது. இப்படம் 2.16 டி.ஆர்.பியை பெற்றது. 9வது இடத்தில் அஜித் நடித்த துணிவு படம் இருக்கிறது இப்படம் 2.23 டி.ஆர்.பி புள்ளியை பெற்றது.
இதையும் படிங்க: சத்யராஜிடம் இப்படி ஒரு வேண்டுகோளை விடுத்த விஜய்சேதுபதி! கட்டப்பா மனசு வைப்பாரா?
8வதாக பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி முக்கிய வேடத்தில் நடித்த சார்பேட்டா பரம்பரை படம் டி.ஆர்.பி-யில் 2.63 புள்ளிகளை பெற்றது. வெற்றிமாறனின் விடுதலை படம் 2.64 புள்ளியை பெற்று 7வது இடத்தில் இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதியும், சூரியும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
6வது இடத்தில் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி படம் 2.82 புள்ளிகளை பெற்றது. 5வதாக கவின் நடிப்பில் உருவான ‘டாடா’ திரைப்படம் 3.45 புள்ளிகளை பெற்றது. சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் 3.63 புள்ளியை பெற்று 4வது இடத்தில் இருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘லவ் டுடே’ படம் 5.22 புள்ளிகளை பெற்று 3ம் இடத்திலும், ‘அரண்மனை 3’ படம் 5.23 புள்ளியை பெற்று 2ம் இடத்திலும், சூர்யாவின் ‘ஜெய்பீம்’ படம் 6.15 புள்ளியை பெற்று முதலிடத்திலும் இருக்கிறது.
இதையும் படிங்க: ஜவ்வா இழுக்கிறதுனா இதானா? எப்பங்க இந்த டைவர்ஸ் கேஸ முடிப்பீங்க!… புலம்பும் ரசிகர்கள்