More
Categories: Entertainment News latest news

காப்பி கூட அடிக்கத் தெரியாதா பாய்ஸ்… ரீமேக் பெயரில் 5 பர்னிச்சர்களை உடைத்த பாலிவுட்!

பாலிவுட் படங்கள் தான் மாஸ் என்ற நிலை சமீபகாலமாக குறைந்து வருகிறது. சவுத் இந்தியாவின் வெற்றி படங்கள் அதிக வசூலை பெற்று மாஸ் ஹிட் அடித்து வருகிறது. இதனால் இந்தியில் சவுத் படங்களின் ரீமேக் அதீக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் அதை ஒழுங்காக எடுக்காமல் சொதப்பி நம்மையே கடுப்பேத்தி வருகின்றனர் பாலிவுட் மக்கள்.

ஓகே கண்மணி- ஓகே ஜானு:

கோலிவுட்டின் டாப் இயக்குனரான மணிரத்னம் இயக்கிய படம் ஓகே கண்மணி. துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் நடித்த இப்படம் காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை ஓகே ஜானு என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்தனர். ஆனால் தமிழ் கதாபாத்திரங்கள் ஓட்டிக்கொண்டது போல இந்தியில் பெரிய ரீச் கிடைக்கவில்லை. படமும் பாக்ஸ் ஆபிஸ் ஃப்ளாப் என்கிறார்கள். ஆதித்யா ராய் கபூர் மற்றும் ஸ்ரத்தா கபூர் முன்னணி வேடமேற்று இருந்தனர்.

Advertising
Advertising

உனக்கும் எனக்கும்- ராமையா வஸ்தாவையா:

ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான படம் உனக்கும் எனக்கும். இப்படத்தினை ஜெயம் ராஜா இயக்கி இருந்தார். படம் கதை மற்றும் காமெடிக்கென நல்ல வரவேற்பை பெற்றது. இப்படமே நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் தான். மீண்டும் ரீமேக் இந்தியில் ரீமேக்காகிய இப்படத்திற்கு ராமையா வஸ்தாவையா எனப் பெயரிடப்பட்டது. இப்படத்தில் கிரிஷ் குமாருடன் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் ஜோடிகளின் கெமிஸ்ட்ரி அதிகமாக பேசப்பட்டது. ஆனால் இந்தியில் சரியாக கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகாததாலே படம் ஃபளாப் எனக் கூறப்படுகிறது.

ரன் – ரன்:

தமிழில் மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மீன் நடிப்பில் உருவான படம் ரன். செம ஆக்‌ஷன் படமாக உருவாகி இருந்தது. ஆனால் படத்தின் வெயிட்டை அதிகரித்தது. அப்படத்தில் விவேக்கின் காமெடி காட்சிகள் தான். ஆனால் இந்தி ரீமேக்கில் காமெடி காட்சிகளை அப்படியே எடுத்திருந்ததால், சிரிக்கணும் என்ற ரீதியில் தான் காட்சிகள் இருந்தன. மாதவன் வேடத்தில் அபிஷேக் பச்சனும், மீரா வேடத்தில் பூமிகாவும் நடித்திருந்தனர்.

பச்சன் பாண்டே- ஜிகர்தாண்டா:

எந்த டாப் ஹீரோக்களும் இல்லாமல் பெரிய பட்ஜெட் இல்லாமல் எடுக்கப்பட்டு ஹிட் கொடுத்த படம் ஜிகர்தாண்டா. இப்படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். பாபி சிம்ஹா மற்றும் சித்தார்த் முக்கிய வேடம் ஏற்று இருந்தனர். படம் செம ஹிட் அடித்தது. இதை இந்தியில் பச்சன் பாண்டே என்ற பெயரில் ரீமேக் செய்தனர். அக்‌ஷய் குமார், பாபி சிம்ஹாவின் வேடத்தை ஏற்று நடித்திருந்தார். படத்தில் அக்‌ஷயிற்கு ஏகப்பட்ட மாஸ் காட்சிகளை ஏத்தியது. படத்திற்கு இறக்கத்தை கொடுத்தது. இதனால் படம் தமிழ் அளவுக்கு நல்ல ரீச்சை எடுக்கவில்லை.

இதையும் படிங்க: மாஸ்டர் ரீமேக்கிலிருந்து விலகிய சல்மான்கான்.. .சொன்ன காரணம்தான் ஷாக்!

லக்‌ஷ்மி-காஞ்சனா:

தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் காஞ்சனா. பல பாகங்களாக வெளியான இப்படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. சரத்குமார் நடிப்பில் மாஸ் காட்ட படம் வசூலில் சக்கை போடு போட்டது. இப்படத்தினை லக்‌ஷ்மி என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்தனர். அக்‌ஷய் நடிக்க படம் பெரிய ரீச் கொடுக்கவில்லை. காரணம் பேய் படம் என்றாலும் படத்தின் காமெடி அதை சரியாக காஞ்சனாவில் பேலன்ஸ் செய்திருந்தனர். அதை லக்‌ஷ்மி தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan

Recent Posts