Cinema History
‘முதல் மரியாதை’ படம் இந்த பிரபலத்தின் உண்மைக் கதையா?.. பல வருடங்களுக்கு பின் வெளிவந்த ரகசியம்..
இயக்குனர் பாரதிராஜாவின் படைப்புகளில் மற்றுமொரு புதிய படைப்பாக அமைந்தது சிவாஜியின் நடிப்பில் வெளியான முதல் மரியாதை திரைப்படம். இந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக வடிவுக்கரசி ஒரு பக்கம் இருந்தாலும் காதல் நாயகியாக ராதா நடித்திருப்பார். பாரதிராஜா எப்பொழுதுமே புதுமையை கையாள்பவர். இந்த படத்திலும் அப்படி ஒரு புதுமையை கையாண்டு இருக்கிறார்.
இப்படி ஒரு காதல் கதையா?
யாருமே எதிர்பார்க்காத ஒரு காதல் கதையை இந்த படத்தின் மூலம் அழகாக சொல்லி இருப்பார் பாரதிராஜா. இந்தப் படத்திற்கு முன்பு வரை சிகப்பு ரோஜாக்கள், காதல் ஓவியம், ஒரு கைதியின் டைரி என பல படங்களில் யூத்துக்களுக்கான ஒரு காதல் கதையை சித்திரம் போட்டு காட்டிய பாரதிராஜா முதல் மரியாதை படத்தில் ஒரு வயதான நபருக்கும் இளம் நங்கைக்கும் இடையே இருக்கும் காதலை அழகாக வெளிப்படுத்தி இருப்பார்.
இதையும் படிங்க ; ‘16 வயதினிலே’ படத்தில் இத யாராவது கவனிச்சீங்களா? யாரும் செய்யாததை செய்து காட்டிய பாரதிராஜா
அதனால் சினிமா பிரபலங்கள் மத்தியில் பாரதிராஜா மீது பெரிய அதிருப்தி ஏற்படுத்தியது. அனைவருமே இந்த படத்திற்கு எதிராக நின்றனர். குறிப்பாக இளையராஜா இந்த படத்தின் முதல் பிரதியை பார்த்துவிட்டு படம் சுத்தமாக நல்லாவே இல்லை என்று வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார். இப்படி அனைவருமே தனக்கு எதிராக நிற்கும் போதும் பாரதிராஜா துவண்டு போய் நிற்கவில்லை.
இதெல்லாம் ஒரு படமா?
ஒரு அழகான காதல் கதையை அந்த இருவரை வைத்து நினைத்து விட்டேன். அதனால் இந்த படத்தை கண்டிப்பாக எடுக்கத்தான் போகிறேன் என்று மிகவும் தைரியமாக எடுத்தார் பாரதிராஜா. அதுமட்டுமில்லாமல் அந்த காலகட்டத்தில் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டாராக வளர்ந்து விட்ட சமயம். அந்த நேரத்தில் போய் சிவாஜியை வைத்து இப்படி ஒரு படம் எடுத்தால் படம் கண்டிப்பாக ஓடாது என்றும் பல பேர் கருதினர்.
இதையும் படிங்க ; ரஜினி மாதிரியே இருக்கிறதால நான் பட்ட கஷ்டம்! வேதனையை பகிர்ந்த நடிகர்
ஆனால் இவை எதையுமே பாரதிராஜா தன் மனதில் போட்டு குழப்பிக்கவில்லை. ஆனால் படம் வெளியாகி எப்பேர்ப்பட்ட வெற்றியை பதிவு செய்தது என அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் இந்தப் படத்தை பற்றிய ஒரு ரகசியத்தை பிரபல எழுத்தாளர் சுரா ஒரு பேட்டியின் மூலம் கூறியிருக்கிறார். அதாவது இந்த முதல் மரியாதை படம் ஒருவரின் இன்ஸ்பிரேஷன் என்று கூறினார்.
எழுத்தாளரின் கதை
பிரபல ஆங்கில எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைக் கதையை மையமாக வைத்துதான் இந்த முதல் மரியாதை படத்தின் கதையை செல்வராஜ் எழுதியிருக்கிறார் என கூறினார். அந்த எழுத்தாளருக்கு உதவியாளராக அதாவது ஸ்டெனோவாக வேலைக்கு சேர்ந்தாராம் ஒரு ஏழைப் பெண் அண்ணா. அந்த எழுத்தாளருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி இறந்துவிட்ட சமயத்தில் ஒரு மகன் மட்டும் இருந்தாராம்.
இதையும் படிங்க ; வண்டிக்கு பின்னாடி போய் ட்ரெஸ் மாத்துனாலும் எட்டிக்கிட்டு பார்ப்பாங்க!. நடிகைக்கு நடந்த சோகம்..
அந்த சமயத்தில் இவருக்கு உதவியாளராக வந்து சேர்ந்த அண்ணாவின் மீது இந்த எழுத்தாளருக்கு ஒரு அபரிமிதமான காதல் மலர்ந்திருக்கிறது. அதேபோல அந்த அண்ணாவிற்கும் இவர் மீது காதல் ஏற்பட்டதாம். அதை ஒரு நேரத்தில் இந்த எழுத்தாளரின் காதலை அந்தப் பெண் முழு மனதுடன் சம்மதித்திருக்கிறார். அதன் பிறகு இருவருக்கும் திருமணம் நடந்ததாம். இதில் முக்கியமாக கருதப்படுவது அந்த எழுத்தாளருக்கும் இந்த பெண்ணிற்கும் வயது வித்தியாசம் கிட்டத்தட்ட 20 இருக்குமாம். இருந்தாலும் காதலுக்கு ஏது வயது அழகு. இதற்கு உதாரணமாக திகழ்ந்தவர்கள் தான் இந்த எழுத்தாளரும் அண்ணாவும். இதை இன்ஸ்பிரேஷன் ஆக வைத்து தான் கதாசிரியர் செல்வராஜ் முதல் மரியாதை படத்திற்கு கதை எழுதினாராம்.