வெட்கம், மானம் இல்லையா?… தனுஷ் ராதிகாவை திட்டியதன் பின்னணி?!… வெளிவந்த உண்மை..!

Published on: November 18, 2024
radhika
---Advertisement---

நயன்தாராவின் ஆவணப்படத்தில் நடிகை ராதிகாவை வெட்கம், மானம் இல்லையா என்று தனுஷ் திட்டி இருப்பதற்கான பின்னணி வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நானும் ரவுடிதான் என்கின்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை, மகாபலிபுரத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

இவர்களின் திருமண வீடியோ ஆவணப்படமாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்கள். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகவே இல்லை. இந்நிலையில் இன்று அவரின் பிறந்த நாளை முன்னிட்டு நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் Nayanthara: Beyond the fairytale என்கின்ற பெயரில் டாக்குமெண்டரியாக வெளியாகி இருக்கின்றது.

இதையும் படிங்க: அதெல்லாம் வேண்டாம்.. இத பண்ணுங்க!. கண்டிஷன் போட்ட விஜய்!.. தளபதி 69 முக்கிய அப்டேட்!..

இந்த ஆவணப் படத்தில் நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து காட்சிகள் பயன்படுத்தப்பட்டதாக கூறி நடிகர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு இருப்பதாக நேற்று முன்தினம் நடிகை நயன்தாரா மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இதுதான் கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைதள பக்கங்களில் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருந்தது.

மேலும் இன்று வெளியான நயன்தாராவின் ஆவணப்படத்தில் நடிகை ராதிகாவை தனுஷ் வெட்கம், மானம் இல்லையா? என்கின்ற வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி வருகின்றது. இதன் உண்மை பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது. தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் என்கின்ற திரைப்படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

nayanthara
nayanthara

விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா நடித்திருப்பார். படப்பிடிப்பு தளத்தில் இருந்த போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்தது அவருக்கு தெரியாதாம். ஒருமுறை நடிகர் தனுஷ் போன் செய்து படப்பிடிப்பு எப்படி சென்று கொண்டிருக்கின்றது என்பது குறித்து ராதிகாவிடம் விசாரித்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று தனுஷ் ராதிகாவிடம் தெரிவிக்க ராதிகாவோ சும்மா சொல்லாத, நான் ஷூட்டிங்கில் தான் இருக்கிறேன், கதவிடாத என்று கூறியிருக்கின்றார். உடனே நடிகர் தனுஷ் உங்களுக்கு வெட்கமா இல்லையா? இவ்வளவு வருஷமா சினிமால நடிக்கிறீங்களே!

பெரிய நடிகைன்னு பெயர் தான் தவிர வேறு எதுவும் இல்லை. உங்க கண்ணு முன்னாடியே இவ்வளவு நடந்து இருக்கு உங்களுக்கு ஒன்னு கூட தெரியலையா? என்று கேட்டிருக்கின்றார். ஏன் என்னடா சொல்ற எனக்கு எதுவுமே தெரியாது என்று கூறியிருக்கின்றார். இந்த விஷயத்தை தான் அந்த ஆவணப்படத்தில் நடிகை ராதிகா கூறியிருக்கின்றார்.

இதையும் படிங்க: Biggboss Tamil: பவித்ராவிடம் அத்துமீறும் ரானவ்… பிக்பாஸ் தமிழில் இப்படி ஒரு காட்சியா? வைரலாகும் வீடியோ!..

தற்பொழுது நயன்தாரா தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு அந்த விஷயம் பூதாகரமாகி இருக்கும் நிலையில், அவர் சொன்ன தகவல் நயன்தாராவின் ஆவணப்படத்தில் வந்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கின்றது. நேற்று முதலே ராதிகா தனுஷுக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தையை பலரும் பலவிதமாக திரித்து பேசி வரும் நிலையில் உண்மை சம்பவம் தற்போது வெளியாகி இருக்கின்றது.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.