ஜனநாயகன் விவகாரம்!.. உதயநிதி ஸ்டாலின் ரியாக்‌ஷன் இதுதான்!…

Published on: January 8, 2026
udhyanidhi
---Advertisement---

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சனையில் சிக்கியிருப்பதால் நாளை படம் வெளியாக முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்குப் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக விஜய் ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

இது அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் ஜனநாயகம் படம் ஜனவரி 9, பராசக்தி படம் ஜனவரி 14 என ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ஜனவரி 10ம் தேதி பராசக்தி ரிலீஸ் என அறிவித்தார்கள்.

Also Read

பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் முதல்வர் மு.க ஸ்டாலினின் உறவினர் மற்றும் படத்தை வெளியிடுவது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் என்பதால் இதற்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக பலரும் நம்புகிறார்கள். ஆனால் இது தவறான செய்தி.. இது தயாரிப்பாளரின் முடிவு.. அதில் பல வியாபாரங்கள் அடங்கியிருக்கிறது.. இதை விஜய் சாரிடமே தெரிவித்தோம்.. அவர் எனக்கு வாழ்த்து சொன்னார்’ என விளக்கம்ளித்தார் சிவகார்த்திகேயன்.

ஜனநாயகம் திரைப்படம் சென்சார் பிரச்சினையில் சிக்கியிருக்கும் நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தபோது ஜனநாயகன் படம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது அவர் எந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டார்.