ஒரு திரைப்படம் என்பது வெறும் கதாநாயகனுக்காக மட்டும் எப்பொழுதும் ஓடுவதில்லை. சினிமாவில் கதாநாயகர்களுக்குதான் முக்கிய பங்கு உள்ளது என்பது என்னவோ உண்மைதான். ஆனால் அதையும் தாண்டி கதாநாயகர்களுக்காக இல்லாமலும் ஓடிய திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் உண்டு.
அதேபோல ஒரு திரைப்படம் பெரிதாக ஓடா விட்டாலும் கூட அதில் இருக்கும் சுவாரஸ்யமான சில விஷயங்களால் படம் பிரபலமாகிவிடும். உதாரணத்திற்கு இளையராஜா இசையமைத்த பல திரைப்படங்கள் பெரிதாக ஓடவில்லை என்றாலும் கூட அந்த படத்தின் பாடல்கள் நிறைய ஹிட் கொடுத்துள்ளன.

இதே மாதிரியான சம்பவம் நடிகர் வடிவேலுவிற்கும் நடந்துள்ளது. வடிவேலுவின் நகைச்சுவைகளில் முக்கால்வாசி நகைச்சுவை காமெடிகளை அதிகபட்சமான மக்கள் பார்த்திருப்போம். ஆனால் அவற்றில் பல காமெடிகள் எந்த படத்தில் வரும் என்று பலருக்கும் தெரியாது. ஆனால் அந்த காமெடிகள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும். அப்படியான சில தோல்வி படத்தில் வந்த காமெடிகளை இப்பொழுது பார்க்கலாம்.
இதையும் படிங்க:விஜயை கைது செய்யனும்! ரசிகர்களை ஏவிவிட்டு என்ன செஞ்சாரு தெரியுமா? டிஜிபி அலுவலத்தில் ஆவேசப்பெண்மணி புகார்
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு.

பரத் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்தான் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு. இப்படி ஒரு திரைப்படம் வந்தது கூட பலருக்கும் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த திரைப்படத்தில் சாமியாராக வரும் வடிவேலுவின் நகைச்சுவை காமெடிகள் பலருக்கும் தெரிந்ததாக இருக்கும். காவி நிற ஆடையை அணிந்து தலையில் மணிகளை கட்டிக் கொண்டு ஒரு கதாபாத்திரமாக அதில் வடிவேலு இருப்பார்.
சத்ரபதி

நடிகர் சரத்குமார் நடித்து வெளியான திரைப்படம் சத்ரபதி. இந்த படம் சிலருக்கு தெரிந்த படமாக இருக்கலாம். ஆனால் பெரிதாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாத ஒரு திரைப்படமாக சத்ரபதி உள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வரும் வடிவேலுவின் மூட்டை பூச்சி கொல்லும் நவீன மிஷின் காமெடி மிகவும் பிரபலமானது.
இதையும் படிங்க:உன்ன பாத்தாலே ஷாக் அடிக்குது!.. ஹை வோல்டேஜ் லுக்கில் அசத்தும் விடுதலை பட நாயகி…
ஜனனம்

ஜனனம் என்கிற பெயரில் ஒரு படம் இருப்பதே பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இந்த படத்தில் நடிகை ஆர்த்திக்கு பைக் விற்று தருபவராக வடிவேலு வருவார்.
அதில் ஒரு திருடராகவே இருப்பார் அந்த காமெடிகள் மிகவும் பிரபலமானவை என்றாலும் அது எந்த படம் என்பது பலருக்கும் தெரியாததாக இருக்கிறது.
மறுபடியும் ஒரு காதல்

வடிவேலு நடித்த தோல்வி படங்களில் பலருக்கும் தெரியாத ஒரு திரைப்படம் மறுபடியும் ஒரு காதல். ஆனால் இந்த படத்தில் வரும் காமெடி காட்சிகள் பிரபலமானவை .
இந்த படத்தில் போலி டாக்டராக வரும் வடிவேலு ஒரு காட்சியில் ஒரு நபருக்கு ஹெல்மெட்டை வயிற்றில் வைத்து தைத்து விடுவார். அந்த காமெடி மிகவும் பிரபலமானது என்றாலும் இந்த படம் என்னவென்று பலருக்கும் தெரியாது.
பிறகு:

வடிவேலு நடித்த யாருக்கும் தெரியாத திரைப்படங்களில் பிறகும் ஒரு திரைப்படம் ஆகும். இந்த படத்தில் வடிவேலு வெட்டியானாக நடித்திருப்பார் அவருடன் நடிகர் கிங்காங் சிறுவர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் பெயர் கூட பலருக்கும் தெரியாது என்றாலும் அந்த காமெடிகள் மிகவும் பிரபலமானவை ஆகும்.
இதையும் படிங்க:ஒரே நேரத்தில் காதலி, மனைவி, தங்கை, அம்மாவா? யாருப்பா அந்த நடிகர்? சொல்லமுடியாத கொடுமை
