எல்லாமே பொய்!. கலைஞர் விழாவில் ராஜ்கிரணை பார்த்து கண்ணீர் விட்ட வடிவேலு!.. போட்டோ பாருங்க!..

மதுரையை சேர்ந்த வடிவேலுவுக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர் நடிகரும், தயாரிப்பாளருமான ராஜ்கிரண். அவரின் அலுவலகத்தில் சின்ன சின்ன வேலைகளை செய்து வந்தார் வடிவேலு. அப்போது அவர் தயாரித்து நடித்த என் ராசாவின் மனசிலே படத்தில் வடிவேலுக்கு சின்ன வேடம் கொடுத்தார்.
சில காமெடிக் காட்சிகள் மற்றும் ஒரு பாடல் காட்சியிலும் வடிவேலு நடித்தார். அதன்பின் சின்னக்கவுண்டர், தேவர் மகன், சிங்கார வேலன் என சில படங்களில் நடித்து தன்னை வளர்த்துக்கொண்டவர்தான் வடிவேலு. ஒருகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறி பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதையும் படிங்க: 10 வருடத்தில் 122 படங்கள்.. இருந்தாலும் அஜித் விஜயுடன் நடிக்க முடியல! யார் அந்த நடிகை தெரியுமா?
ஆனால், அவர் செய்த ஓவர் அலப்பறையில் 4 வருடங்கள் தமிழ் திரையுலகம் அவரை ஒதுக்கி வைத்தது. சினிமாவில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் வடிவேலு நிஜவாழ்வில் மிகவும் மட்டமானவர் என அவருடன் நடித்த பல காமெடி நடிகர்களும் ஊடகங்களில் தெரிவித்தனர். உடன் நடிக்கும் காமெடி நடிகர்களை வளரவிடமாட்டார்.
அவர்களுக்கு அதிக சம்பளமும் வாங்கி கொடுக்க மாட்டார். அதோடு, பல வகைகளிலும் அவர்களை அசிங்கப்படுத்துவார். சிங்கமுத்துவும் வடிவேலும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என பேட்டி கொடுத்த போண்டா மணியை வீட்டுக்கு வர சொல்லி காலில் எட்டி உதைத்தவர்தான் வடிவேலு. இதை போண்டா மணியே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: விஜயகாந்துக்கு துடிக்காத மனசு பவதாரிணிக்கு துடிக்குதா?!. வடிவேலுவிடம் பொங்கும் ரசிகர்கள்..
விவேக், மயில்சாமி, அல்வா வாசு, போண்டா மணி என அவருடன் பல படங்களில் நடித்த நடிகர்களின் மரணத்திற்கே போகாதவர்தான் வடிவேலு. அதேபோல், யாருக்கும் எந்த உதவியையும் வடிவேலு செய்யமாட்டார். இந்நிலையில்தான், கலைஞர் 100 விழாவில் ராஜ்கிரணை பார்த்ததும் அவரை மதிக்காமல் வேறு வண்டியில் ஏறி வடிவேலு சென்றுவிட்டதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.
ஆனால், உண்மையில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. ராஜ்கிரணும் வடிவேலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதும் இருவரும் கட்டித்தழுவி அன்பை பகிர்ந்து கொண்டார்கள். அப்போது வடிவேலு கண்ணீர் விட்டும் அழுதிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களையும் இங்கே பகிர்ந்துள்ளோம்.
Photo credits to Touring Cinemas
இதையும் படிங்க: வடிவேலுவை அடிச்சேன்! என் வாய்ப்பே போச்சு – மனம் வருந்தி பேசிய தனுஷ் பட நடிகை