Cinema History
இப்படி நான் பேச மாட்டேன்!. வடிவேலு நடிக்க மறுத்த சூப்பர் காமெடி!.. அப்புறம் அவர் சொல்லிதான் நடிச்சாராம்!..
Actor vadivelu: ராஜ்கிரணால் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர் வடிவேலு. அதன்பின் சின்னக்கவுண்டர், சிங்காரவேலன், தேவர் மகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். தொடர்ந்து கிராமபுற படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
வைகைப்புயல் என்கிற பட்டமெல்லாம் கிடைத்தது. அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களுக்கு நெருக்கமானார். ஒருகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராகவும் மாறினார். காண்ட்ராக்டர் நேசமணி, நாய் சேகர், கைப்புள்ள, புலிகேசி, வீரபாகு என அவர் நடித்த கதாபாத்திரங்களும் ரசிகர்களிடம் பிரபலமாகின.
இதையும் படிங்க: வடிவேலு அட்வான்ஸ் என் சம்பளமா?!.. விஜயகாந்த் படத்தில் தகராறு செய்த செந்தில்…
அதோடு, படத்தில் அவர் பேசிய ‘ஒய் பிளட்.. சேம் பிளட்.. ரிஸ்க் எடுக்குறது எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி.. குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்.. வேணாம் அழுதிடுவேன்… என்னய வச்சி காமெடி கீமெடி பண்ணலயே.. ஆணிய புடுங்க வேணாம்’ போன்ற பல வசனங்கள் சாதாரண மக்களும் பேசும் வசனங்களாக மாறியது.
சுந்தர் சி-யின் இயக்கத்தில் உருவான வின்னர் மற்றும் கிரி ஆகிய படங்களில் வடிவேலுக்கு அமைந்த காமெடி என்பது அவரின் உச்சம். எப்போதும் ரசிகர்களால் சிலாகிக்கப்படும் காமெடி காட்சிகள் அது. வின்னர் படத்தில்தான் வடிவேலு கைப்புள்ளையாக வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
இதையும் படிங்க: விஜய் கொடுத்த வாழ்க்கை… வளர வேண்டிய கலைஞர் கேரியரில் விளையாடிய வடிவேலு..! இதெல்லாம் பாவம்…
அதேபோல் கிரி படத்தில் வீரபாகுவாக வந்து காமெடியின் உச்சத்தை தொட்டிருப்பார். அதிலும் அக்காவை வைத்து அவர் பேக்கரி வாங்கியதாக அர்ஜூனிடம் அவர் சொல்லும் கதை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. முதலில் இந்த வசனத்தை பேச வடிவேலு மறுத்துள்ளார். என் அக்காவை நானே இழிவாக பேசுவது போல் இருக்கிறது. இதை நான் பேச மாட்டேன் என சொல்லிவிட்டாராம்.
அதன்பின் சுந்தர் சி அவரிடம் சென்று ‘இது நல்லா வரும்.. ரசிகர்கள் ரசிப்பார்கள்.. சூப்பர் ஹிட் அடிக்கும்’ என எடுத்து சொல்லி அவரை சம்மதிக்க வைத்து நடிக்க வைத்தாராம். சுந்தர் சி சொன்னது போலவே அந்த அக்கா காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜயகாந்த் படத்துக்கு காசு வாங்கிட்டு நடிக்காம போன வடிவேலு!.. களத்தில் இறங்கி செஞ்ச கவுண்டமணி..