மாமன்னன் ஆன பின்னாலயும் அந்த காஜி போகலையே!.. கதாநாயகியை நினைத்து புலம்பிய வடிவேலு!..

by Saranya M |
மாமன்னன் ஆன பின்னாலயும் அந்த காஜி போகலையே!.. கதாநாயகியை நினைத்து புலம்பிய வடிவேலு!..
X

சந்திரமுகி படத்துக்கும் சந்திரமுகி 2 படத்துக்கும் ஒரே கனெக்‌ஷன் யார் என்றால் அது நம்ம முருகேசன் வடிவேலு தான். ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, மாளவிகா, வினீத் என டோட்டலாக காஸ்டிங் மாறினாலும், வடிவேலு மட்டுமே தொடர்கிறார்.

சந்திரமுகி 2 படத்தை இயக்குநர் பி. வாசுவே இயக்கி உள்ள நிலையில், முதல் படத்தை போலவே இந்த படமும் ரசிகர்களை கவரும் விதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: லியோ விஜய்க்கு வந்த ஆயிரத்தி ஒன்னாவது கவலை!.. திருமண நாளில் கூட நிம்மதியா இருக்க முடியலையே!..

லைகா நிறுவனம் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் பூஜையை தவிர மற்ற அனைத்து பட விழாக்களையும் பிரம்மாண்டமாக நடத்தி வருகிறது. சென்னை ஓஎம்ஆரில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் இன்று மாலை நடைபெற்ற சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேடையில் ஏறி பேசிய வடிவேலு, சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் நடித்த மாமன்னன் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அடுத்து சந்திரமுகி 2 படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என ஆரம்பித்து பேசினார்.

இதையும் படிங்க: விவாகரத்தா? பாஸ் அவங்க வெள்ளி விழால கொண்டாடுறாங்க..! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா விஜய்!

ஒரு கட்டத்தில் செய்தியாளர்கள் முதல் பாகத்தில் உங்களுக்கு ஜோடியா நடிச்ச சொர்ணா இந்த படத்திலும் இருக்காங்களா எனக் கேட்க சொர்ணாவை வீட்டுக்கு வெளியே கட் பண்ணி அனுப்பிட்டாங்க என்றார். கங்கனா ரனாவத்துடன் நடித்த அனுபவத்தை சொல்லுங்க என வாயை பிடுங்க, கங்கனாவை நான் பார்க்கவே இல்லைப்பான்னு ஓவர் ஃபீலிங்கில் வடிவேலு பொங்கி பேசியுள்ளார். மேலும், சந்திரமுகி படத்தில் கடைசி வரை காட்டாத கோவாலு இந்த படத்தில் உயிரோட வருவான் என்றும் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் இணைந்து நடித்த வடிவேலு அந்த படத்தில் ஏகப்பட்ட டபுள் மீனிங் காமெடி காட்சிகளில் நடித்துக் கலக்கியிருப்பார். ஆனால், மாமன்னன் ஆன பின்னரும், முதிர்ச்சி இல்லாமல் சொர்ணா, கங்கனான்னு புலம்புறாரே இந்த படத்தில் எந்த கோழியை அமுக்கப் போறாரோன்னு நெட்டிசன்கள் செம காஜியா இந்த ஆளு என சந்திரமுகி ஆடியோ வெளியீட்டு விழா வீடியோவுக்கு கீழ் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Next Story