வடிவேலு சொன்ன ஐடியா.. படம் வேற லெவல்! விஜய் படம் குறித்த சீக்ரெட்டை பகிர்ந்த இயக்குனர்

Published on: January 22, 2024
vijay
---Advertisement---

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு என்று படைக்கப்பட்டவர்கள் ஏராளம். அந்த காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணனில் இருந்து நாகேஷ் வரை ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் தங்கள் திறமைகளால் பெரும் புகழை அடைந்திருக்கின்றனர். நகைச்சுவை என்று சொல்லும் போது உடனே நம் நினைவுக்கு வருபவர் நாகேஷ்தான். அந்தளவுக்கு 50களில் இருந்து இன்றைய காலகட்ட தலைமுறைகள் வரை அனைவருடனும் பயணித்திருக்கிறார்.

நாகேஷ் அளவுக்கு யாராலும் வரமுடியாது என்றாலும் அவர் அளவுக்கு ஒரு புகழை அடைந்தவர் வைகைப்புயல் வடிவேலு. ஆரம்பகாலங்களில் துணை நடிகராக நடித்து வந்த வடிவேலு அதன் பின் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். அதுவும் நகைச்சுவையோடு குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்கள் மனங்களை வென்றார்.

இதையும் படிங்க: பொறாமை இருக்க வேண்டியதுதான்! அதுக்காக இப்படியா? பிரபல நடிகையை விமர்சித்த மகிமா நம்பியார்

அதற்கு சிறந்த உதாரணங்களாக தேவர்மகன் மற்றும் கிழக்கு சீமையிலே படத்தை சொல்லலாம். இப்படி அடுத்தடுத்து அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் வடிவேலுவை பார்க்காமல் நம்மால் கடந்து போக இயலாது. நகைச்சுவையில் ஒரு ராஜாவாக மின்னினார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் ஒரு நடிகராகவே மாறினார்.

இந்த நிலையில் பிரபல இயக்குனரான எழில் வடிவேலுவை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்ற படத்தை இயக்கியவர்தான் எழில். அந்தப் படம் வெளியாகி 25 வருடங்களை கடந்த நிலையில் தற்போது அந்தப் படத்தை பற்றிய தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார் எழில்.

இதையும் படிங்க: ஸ்டைலீஸ் லுக்கில் அஜித்.. அஜர்பைசான்லயும் விடாத ரசிகர்கள்!.. தாறுமாறா வைரலாகும் புகைப்படங்கள்!..

1999 ஆம் ஆண்டு வெளியான துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1995 ஆம் ஆண்டு இந்த கதையை வடிவேலுவிடம்தான் எழில் கூறினாராம். அதாவது முதலில் வடிவேலுவை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார். கதை பிடித்துப் போன வடிவேலு நிறைய தயாரிப்பாளர்களிடம் போய் கேட்டிருக்கிறார். ஆனால் யாரும் முன்வரவில்லையாம்.

இருந்தாலும் அந்தப் படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு சீன் வடிவேலு சொல்லித்தான் எடுத்தாராம் எழில். சிம்ரன் கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் போது ஒரு குழந்தையின் பெயர் குட்டி என இருக்கும். அந்த குழந்தையின் பெயரை கேட்டதும் சிம்ரன் அப்படியே அந்த குழந்தையை தூக்கிக் கொஞ்சுவார். இதன் மூலம் சிம்ரனுக்கு குட்டி என்ற பெயருடைய ஆளைத்தான் தெரியாதே தவிர இன்னமும் அந்த குட்டி என்ற பெயரை காதலித்துதான் வருகிறார் என்பதை உணர்த்துவிதமாக அந்த காட்சி இடம்பெற்றிருக்கும். இந்த சீனை இப்படி எடுக்கச் சொன்னதே வடிவேலுதானாம்.

இதையும் படிங்க: உதவி செய்த நடிகர் கஷ்டப்பட்ட போது திமிர் காட்டிய சிவகார்த்திகேயன்!… வாய்ப்பு கேட்ட காசு கொடுத்த அதிர்ச்சி!…