இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. நடிகர் பிரசன்னா வைத்து கண்ணும் கண்ணும் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் மாரிமுத்து. அதன் பின்னர் புலிவால் என்கிற படத்தை மட்டும் இயக்கியுள்ளார்.
நடிகர் அஜித்தின் ஆசை படத்தில் எல்லாம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மாரிமுத்து. இந்நிலையில் நடிகர் மாரிமுத்து அளித்த பேட்டி ஒன்றில், உலகநாயகன் கமலை விட வடிவேலுதான் சிறந்த நடிகர் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கடைசி வரை கம்பி நீட்டிய விஜய்!.. நயன்தாராவை நம்பி வீணாப்போச்சே!.. அடிவாங்கிய ஜவான் வசூல்!..
நானும் வடிவேலுவும் ஒன்றாகத்தான் சென்னைக்கு கிளம்பி வந்து, ராஜ்கிரண் சார் ஆபீஸில் தங்கினோம். இருவரும் ஒரே பாயில் படுத்துக் கொண்டு கழித்த நாட்கள் எல்லாம் மறக்கவே முடியாது. திரையில் நடிகனாக வேண்டும் என்கிற வெறு வடிவேலுவிடம் அப்போதே ஊறி இருந்ததை கவனித்தேன்.
நடிகர் வடிவேலு வெறும் காமெடி நடிகன் அல்ல அவர் ஒரு காமெடி விஞ்ஞானி. எப்படி காமெடி செய்தால் ரசிகர்கள் சிரிப்பார்கள், எப்போது முகத்தை காட்ட வேண்டும் எப்போது முதுகை காட்ட வேண்டும் என்பது வரை வடிவேலுக்கு தெளிவாக தெரியும். என்னைப் பொருத்தவரையில் நடிகர் கமல்ஹாசனை விட சிறந்த நடிகர் என்றால் அது வைகை புயல் வடிவேலு தான் என்பேன் என அந்த பேட்டியில் பேசியுள்ளார் மாரிமுத்து.
இதையும் படிங்க: டப்பிங் அறையில் நடந்த திக் திக் நிமிடங்கள்! மாரிமுத்து இறப்பதற்கு முன் பேசிய வார்த்தைகள் – உடனிருந்த இன்ஜினியர்
மாரிமுத்து இயக்கிய கண்ணும் கண்ணும் படத்தில் வடிவேலுவின் காமெடிகள் எல்லாமே தூள் கிளப்பும் எப்படி என்ன மாதிரியே யோசிக்கிறீங்க என வடிவேலு கேட்க, இரண்டு பேருமே ஒரே ஊரிலிருந்து வந்தவர்கள் தானே நீங்க பார்த்த அதே விஷயங்களைத்தான் நானும் பார்த்து வளர்ந்தேன். உங்களுக்கு இந்த காமெடி எல்லாம் ஒர்க்அவுட் ஆகும் என நினைத்து தான் உங்களை யோசித்து எழுதினேன் எனக் கூறியதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இப்படி நெருக்கமான நண்பரின் மறைவுக்கு வடிவேலு இரங்கல் தெரிவிப்பாரா அல்லது நேரில் சென்று அஞ்சலி செலுத்துவார் என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.
இன்று வெற்றிமாறன்…
தனுஷ் மற்றும்…
கங்குவா படத்திற்கு…
Pushpa 2:…
SK 23:…