துரோகம்னா விஷம்… அதிலும் சுருளிராஜனுக்கு அப்படி நடந்தது..! காமெடியாய் சொன்ன வடிவேலு

by sankaran v |   ( Updated:2025-04-18 05:44:18  )
vadivelu, surulirajan
X

vadivelu, surulirajan

Gangers: நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேங்கர்ஸ் படத்தில் இயக்குனர் சுந்தர்.சி.யுடன் வடிவேலு கைகோர்க்கிறார். இதுகுறித்தான தனியார் சேனல் ஒன்றுக்கு வடிவேலு, சுந்தர்.சி. உரையாடல் நடந்தது. அதில் ஆங்கர் வடிவேலுவிடம் துரோகம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு தனக்கே உரிய பாணியில் வடிவேலு சொன்ன பதில் இதுதான்.

துரோகத்தைப் பற்றி வடிவேலு சொல்லும்போது தனக்கு நேர்ந்த பலவற்றையும் சொல்கிறார். இந்த துரோகத்துல எவ்வளவு நஞ்சு இருக்கு. எவ்வளவு விஷம் இருக்கு. துரோகத்தால நானும் பாதிக்கப்பட்டவன். அதிலும் நம்பிக்கை துரோகம்கறது அதை விட மோசம். நம்பி வாழ்றது வேற. நம்பாம வாழ்றது வேற. ஆனா நம்பி வாழ்றவன் எத்தனை பேரு? என் வாழ்க்கையிலும் நடந்துருக்கு. சுருளிராஜன் எல்லாம் எவ்வளவோ அனுபவிச்சிருக்காரு.

மேக்கப் போடும்போது சுருளிராஜன் கழுத்துல கிடக்குற தங்கச்செயினைக் கழற்றி மேக்கப் மேனிடம் கொடுத்துடுவாராம். சாயங்காலம் போகும்போது வாங்கிக்குவாராம். தினமும் இப்படியே நடந்துருக்கு. ஒருநாள் காலையில கழற்றிக் கொடுத்தவர் சாயங்காலம் கேட்குறார். மேக்கப் மேன் 'என்ன செயின்? எங்கிட்ட தரலயே..'ன்னு சொன்னானாம்.

அவன் அன்னைக்கு அங்க இல்லையாம். அவன்னு நினைச்சி வேற யாருக்கிட்டயாவது கொடுத்தாரா என்னன்னு யாருக்குத் தெரியும்? 'டேய் 25 பவுனுடா'ன்னு சொன்னாராம். 'குடுறா'ன்னு கேட்டதும் 'என்ன குடுறா'ன்னு கேட்டானாம். 'எப்பவும் குடுப்பேலா'ன்னு கேட்கவும், 'இன்னைக்கு எங்கிட்ட கொடுக்கலையே'ன்னாராம் மேக்கப் மேன். அப்புறம் 3 நாள் லீவு போட்டுட்டுப் போயிட்டாராம் என சிரிப்பாய் சிரித்தபடி சொல்கிறார் வடிவேலு.

Next Story