
Flashback
என்னா மாதிரி நடிச்சிருக்காம்பா.. படத்தைப் பார்த்துக் கதறி அழுத வடிவேலு…. அட அவனா இவன்?
2023ல் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத்பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. இதுவரை காமெடியனாகவே பார்த்து வந்த நமக்கு வடிவேலுவின் குணச்சித்திர நடிப்பு அசத்தலாக இருந்தது. அனைவரையும் கவர்ந்தது. படத்தின் 50வது நாள் விழாவில் வடிவேலு கலந்து கொண்டு படத்தைப் பற்றி பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
எத்தனையோ நகைச்சுவை படங்கள்ல நான் நடிச்சாலும் இந்த ஒத்த படம்தான் பேரு வாங்கிக் கொடுத்துருக்கு என்கிறார் வடிவேலு. அதே போல அந்தக் கதையை மாரி செல்வராஜ் சொல்ல அதை ஓகே பண்ண வச்சது உதயநிதிதான் என்ற விஷயத்தையும் வடிவேலு பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில் 6 காட்சிகள் வடிவேலுவுடைய குலையை அத்து விட்டதாகவும், தூங்கவிடாமலும் செய்ததாம்.
படத்தில் பசங்க இறந்தபிறகு மலை உச்சியில் முகட்டுல இருந்து அழுகுற அந்த சீனை ஒரு ஆடியன்ஸாகப் பார்த்து வடிவேலுவும் கதறி கதறி அழுதாராம். அவர் நடிச்ச அந்த சீனையே வேற யாரையோ பார்த்த மாதிரிதான் வடிவேலு மெய்சிலிர்க்க பார்த்தாராம். பைக்ல தகப்பனும் மகனும் இறுக்கமான முகத்துடன் போற காட்சி எனக்குப் பிடிச்சது.

Mamannan
படத்தில் அதே வீட்ல இருந்து வடிவேலு பேசும்போது மனைவியாக நடித்தவர் அவரது காலில் கையை வைத்துப் பேசும் அந்தக் காட்சியும் அவருக்கு ரொம்ப பிடிச்சது என்கிறார் வடிவேலு. அதே போல படத்தில் அப்பாவும், பிள்ளையும் உணர்வைப் பரிமாறும் காட்சிகளை மாரி செல்வராஜ் அருமையாக எடுத்து இருந்ததாகவும் வடிவேலு சிலாகித்துச் சொல்கிறார்.
படத்துல ஒவ்வொரு காட்சியிலும் ஜீவன் இருந்தததாகவும் வடிவேலு குறிப்பிட்டுச் சொன்னார். மாரிசெல்வராஜிக்கு ஒரு வேண்டுகோளும் வைத்தார். கொஞ்சம் நகைச்சுவைப் படங்களும் பண்ணுங்க. தொடர்ந்து இதே மாதிரி படங்களை எடுத்துக் கொண்டு உடம்பைக் கெடுத்துக்க வேணாம்னும் வடிவேலு கேட்டுக் கொண்டார். இந்த மாதிரி வெற்றி எனக்குக் கிடைக்கல என்கிறார் வடிவேலு.