கவுண்டமணி நடித்த 70 படங்களுக்கும் மேலாக காமெடி டயலாக்கை எழுதியவர் சாய் ராஜகோபாலன். சமீபத்தில் கவுண்டமணி ஹீரோவாக நடித்த ஒத்த ஓட்டு முத்தையாவை இவர்தான் இயக்கினார். இவர் வடிவேலு உடனான தனது சினிமா அனுபவங்கள் குறித்து இப்படி சொல்கிறார். வடிவேலுவுக்கு 15 படங்கள் வரை காமெடி டிராக் எழுதியுள்ளார். பாசமுள்ள பாண்டியரே படத்தில் இருந்து வடிவேலுவுக்கு எழுத ஆரம்பிச்சேன்.
ராஜ்குமார், ராசுமதுரவன், சிங்கமுத்து இவங்க தான் வடிவேலுவுக்கு டயலாக் எழுதுவாங்க. மொத்தமா உட்கார்ந்து பேசுவாங்க. வாங்குற பணத்தை ஷேர் பண்ணி வடிவேலு கொடுத்துடுவாரு. முதல் முதலா அவருக்கு காமெடி டிராக்னு நான்தான் எழுதுனேன். மானஸ்தன் படத்துல நல்ல காமெடி. மீம்ஸ் எல்லாம் நல்லா போச்சுது என்கிறார் சாய் ராஜகோபாலன்.
விவேக், வடிவேலு இருவரும் இணைந்து நடித்த படம் மிடில் கிளாஸ் மாதவன். இதுல இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை வந்ததுன்னு சாய் ராஜகோபாலன் சுவாரசியமாக இப்படி தெரிவித்துள்ளார். படத்துல வடிவேலு தான் அதிகமாக ஸ்கோர் பண்ணிருப்பாரு. அதுல விவேக்கும் நடிச்சிருப்பாரு. கைலியைத் தூக்கிப் பிடிச்சிக்கிட்டு நடக்குறது வடிவேலுவை விட்டா ஆளே இல்லை.
அதுக்கு சரிசமமா விவேக்கும் படத்துல அசத்தலா காமெடில கலக்கிருப்பாரு. வடிவேலு கைலியைத் தூக்கிட்டு நடிச்சது ஆபாசம் மாதிரி இருக்குன்னு பிரபு வேணான்னு சொன்னாராம். அப்புறம் டைரக்டர் டிபி.கஜேந்திரன் எல்லாரும் அந்த சீன் காமெடியா இருக்கும். குடும்பத்தோடு பார்க்கலாம்னு சொன்னதுக்குப் பிறகுதான் பிரபு சமாதானம் ஆனாராம்.
வடிவேலுவுக்கு ஆரம்பத்துல அந்தப் படத்துல விவேக்குக்கு சீன் ஜாஸ்தியா இருக்குமோன்னு ஃபீல் வந்தது. அப்புறம் டப்பிங்ல பார்க்கும்போது அவரு ஓகே. கரெக்டாத்தான் இருக்குன்னு நினைச்சாரு.

வடிவேலு எங்கிட்ட சொன்னாரு. ‘கோபால் எனக்கு விவேக் பெட்டாக்ஸ்ல அடிபட வச்சி இப்படி ஆகிட்டேன். அவனுக்கு ஏதாவது பண்ற மாதிரி ஒரு சீன் வைங்க’ன்னு சொன்னாரு. ‘இடுப்புல முண்டாசு கட்டுன ஒரே ஆளு நீதான்டா’ன்னு விவேக் சொல்வாரு. அதுவரைக்கும் சீன் பேப்பர்ல எழுதிருந்தேன். அப்புறம் வடிவேலு சொன்னதைக் கேட்டதும் ‘விளக்கெண்ணையை வாசல்ல ஊத்திருங்க’ன்னு வடிவேலுகிட்ட சொன்னேன்.
விவேக் சார் நீங்க வழுக்கிக்கிட்டே போய் டயலாக் பேசுங்கன்னு சொன்னேன். ‘என்ன ராஜகோபால் சார் பேப்பர்ல இல்லையே…’ன்னாரு விவேக். நானும் ‘இல்ல சார். நல்லாருக்கும்’னு சொல்லி புரியவச்சி நடிக்க வச்சேன். அப்பதான் விவேக் ‘டேய் எங்க தாத்தா, பாட்டன்லாம் இமயமலை பனிச்சறுக்குலயே உருண்டவங்கடா’ன்னு விவேக் டயலாக் பேசிக்கிட்டே போய் வழுக்கி விழுவாரு. ‘ஏன்டா இதை நீதான் பண்ணுனீயா?’ன்னு வடிவேலுவைப் பார்த்துக் கேட்டுக்கிட்டே தான் போவாரு என்கிறார் சாய் ராஜகோபாலன்.