ஐஸ்வர்யா ராய்க்கு எழுதுனது!.. நேக்கா ஐஸ்வர்யா ஷங்கருக்கு போட்டுட்டாரே!.. பலே கில்லாடி வைரமுத்து!..

by Saranya M |   ( Updated:2024-04-15 21:52:47  )
ஐஸ்வர்யா ராய்க்கு எழுதுனது!.. நேக்கா ஐஸ்வர்யா ஷங்கருக்கு போட்டுட்டாரே!.. பலே கில்லாடி வைரமுத்து!..
X

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கு நேற்று இரண்டாவது திருமணம் நடைபெற்றது. விளையாட்டு வீரர் ராகுல் என்பவரை ஏற்கனவே திருமணம் செய்த நிலையில், முதல் கணவர் செயல்கள் கீழ்த்தரமாக இருப்பதாக வெடித்த சண்டை காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார் ஐஸ்வர்யா ஷங்கர்.

திருமணமாகி சில மாதங்கள் கூட தனது முதல் சரியாக வாழாத நிலையில் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை தேட ஆரம்பித்த ஷங்கர் உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயன் என்பவரை மாப்பிள்ளையாக தேர்வு செய்து நேற்று பிரம்மாண்டமாக திருமணத்தையும் நடத்தி வைத்தார்.

இதையும் படிங்க:விரட்டி விரட்டி வெட்டும் விஷால்!.. ரத்தினம் டிரெய்லரை பார்த்தீங்களா?.. ஹரி இன்னும் திருந்தல போல!..

ஷங்கர் மகள் திருமணத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சியான் விக்ரம், சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நடிகர் விஜய் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதால் பங்கேற்கவில்லை. நடிகர் அஜித் பைக் டூர் சென்றிருப்பதால் அவரும் கலந்து கொள்ளவில்லை.

ஷங்கர் படங்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி கொடுத்த கவிஞர் வைரமுத்து திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தனது மகன் மதன் கார்க்கி உடன் இணைந்து வைரமுத்து திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது எடுத்த புகைப்படத்தை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க: ரெட் ஜெயண்டுடன் இதுதான் பிரச்சனை!.. சினிமா என் கையில இருக்குன்னு சொல்லக் கூடாது.. விஷால் காட்டம்!..

"அழகிய நிலவில்

ஆக்சிஜன் நிரப்பி

அங்கே உனக்கொரு

வீடு செய்வேன்

உன்னுயிர் காக்க

என்னுயிர் கொண்டு

உயிருக்கு உயிரால்

உறையிடுவேன்

பால்வண்ணப் பறவை

குளிப்பதற்காகப்

பனித்துளி எல்லாம்

சேகரிப்பேன்" என ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளை வைரமுத்து பதிவிட்டுள்ளார். அந்த ஐஸ்வர்யா ராய்க்கு எழுதிய பாடல் வரிகளை இந்த ஐஸ்வர்யா ஷங்கருக்கு போட்டு எப்படி மேட்ச் பண்ணிட்டாரு பாருங்க வைரமுத்து என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அந்த ரெண்டு நடிகைகள் கூட நடிக்கதான் ரொம்ப பிடிக்கும்! இப்படி போட்டு உடைச்சிட்டாரே ரஜினி!

Next Story