லியோ படத்தில் வாய்ப்பு வாங்க வையாபுரி பட்ட பாடு!. இதையே ஒரு கதையா எடுக்கலாம்!..

Published on: October 7, 2023
vaiyapuri
---Advertisement---

வையாபுரி தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவர். இவர் தமிழில் கிட்டதட்ட 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் காமெடிகள் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும். இவரின் தோற்றமே இவரின் காமெடிகளுக்கு வலுவை கொடுத்தது. இவர் உடன் பிறப்பு எனும் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார்.

பின் அவ்வை ஷண்முகி, உல்லாசம், கண்ணெதிரே தோன்றினாள் போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனது காமெடிக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்துள்ளார்.

இதையும் வாசிங்க:ஷூட்டிங்கில் ஹாயாக இருந்த ரஜினி… ஒரே அழைப்பால் அலற விட்ட பிரபலம்..! சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?

நடிகர் விஜய்யுடன் இணைந்து போக்கிரி, சுறா போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த காமெடிகளும் வெற்றியடைந்துள்ளன. இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிக்க வாய்ப்பினை பெறுவதற்காக இவர் மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

இதை சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் அவரே தெரிவித்துள்ளார். இவர் நடிகர் கமல்ஹாசனுக்கு நெருக்கமானவர். கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ்க்கு அடிக்கடி செல்வாராம். கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிக்க மிகவும் ஆசைப்பட்டுள்ளார். தனது விருப்பத்தை கமலிடமும் கூறியுள்ளார். ஒரு திருமண விழாவிற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வருவதை கேள்விபட்டு இவர் அங்கு சென்றுள்ளார். லோகேஷிடமும் பேசியுள்ளார். ஆனால் விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையாம். பின் லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தின் படபிடிப்பினை நடத்தி கொண்டிருப்பது தெரிந்து அங்கு சென்றுள்ளார்.

இதையும் வாசிங்க:அன்பறிவு படத்தில் லோகேஷ் ஹீரோ இல்ல… இந்த ஸ்டார் தானாம்? தேவையா இதெல்லாம்..!

ஆனால் லேகேஷின் உதவியாளர் லோகேஷ் ஆக்‌ஷன் சீன் எடுத்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். பின் சில நேரம் காத்திருந்த வையாபுரியை லோகேஷின் உதவியாளர் மாலை நேரம் வருமாறு கூறியிருக்கிறார். இவரும் சிறிது நேரம் கழித்து வந்துள்ளார். லோகேஷையும் சந்தித்துள்ளார். லோகேஷிடம் இவர் லியோ படபிடிப்பு ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள் கூறிவிட்டு சென்று விட்டாராம்.

பின் வீட்டிற்கு சென்றவுடன் லோகேஷ் அலுவலகத்திலிருந்து போன் வந்துள்ளது. படபிடிப்புக்கான தேதியையும் நேரத்தையும் கூறியுள்ளனர். இவ்வாறு தான் ஆசைப்பட்ட பட வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. மேலும் லோகேஷ் போன்ற இளம் இயக்குனர்களுடன் வேலை பார்க்கும்போது புதுமையான அனுபவமாக இருந்ததாக இவர் தெரிவித்திருந்தார்.

இதையும் வாசிங்க:டிரெய்லரை இத்தனை தடவை பார்த்தாரா? லோகேஷுடன் சேர்ந்து குலுங்கி குலுங்கி சிரித்த விஜய்- அப்படி என்னவா இருக்கும்?

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.