Connect with us
loki

Cinema News

டிரெய்லரை இத்தனை தடவை பார்த்தாரா? லோகேஷுடன் சேர்ந்து குலுங்கி குலுங்கி சிரித்த விஜய்- அப்படி என்னவா இருக்கும்?

Leo Trailer: விஜயின் நடிப்பில் வரும் 19ஆம் தேதி திரைக்கு வரும் படம் லியோ. லோகேஷ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், மிஷ்கின் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் லியோ.

இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ்தான் தயாரித்திருக்கிறது. ரசிகர்கள்  மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள படமாக லியோ இருக்கிறது. எதிர்பார்ப்பிற்கு இடையில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் தற்போது லியோ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கலங்க வைத்திருக்கிறது.

இதையும் படிங்க: அன்பறிவு படத்தில் லோகேஷ் ஹீரோ இல்ல… இந்த ஸ்டார் தானாம்? தேவையா இதெல்லாம்..!

இந்தப் படத்தின் டிரெய்லரை பற்றி பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் இன்று  ஒரு பேட்டியில் லியோ படத்தை பற்றியும் அதில் நடித்த நடிகர்கள் , நடிகைகள் பற்றியும் தன்னுடைய அனுபவங்களை லோகேஷ் பகிர்ந்தார்.

அதில் சில சுவாரஸ்யமான சில சம்பங்களை கூறினார். அதாவது இந்த டிரெய்லரை முதன் முதலில் விஜயிடம்தான் போட்டுக் காண்பித்தாராம் லோகேஷ். விஜய் லியோ பட டிரெய்லரை மூன்று  முறை பார்த்துவிட்டு அற்புதமாக இருக்கிறது என்று சொன்னாராம்.

இதையும் படிங்க: கேஜிஎப் பட ரசிகர்களுக்கு செம ட்ரீட்!.. தெறி மாஸா உருவாகவுள்ள 3ம் பாகம்!.. பி ரெடி ஃபேன்ஸ்

மேலும் லோகேஷுக்கு தாஸ் என்ற பெயர் மிகவும் பிடிக்குமாம். அவர் படிக்கும் போது அவருக்கு சீனியராக தாஸ் என்ற பெயரில் ஒரு நண்பர் இருந்தாராம். அவரை லோகேஷ் தாஸ் அண்ணா என்றுதான் அழைப்பாராம். அதாவது இந்த பெயரை சொல்லும் போது வருகிற அந்த ஒலி கேட்பதற்கு நன்றாக இருக்கும் என்றும் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் எனக்கும் விஜய் அண்ணாவுக்கும் இடையில் சண்டை என்ற ஒரு வதந்தி பரவிய நேரத்தில் அந்த செய்தியை நானும் விஜய் அண்ணாவும் சேர்ந்துதான் படித்தோம் என்றும் அதை பார்த்து விஜய் அண்ணாவும் நானும் குலுங்கி குலுங்கி சிரித்தோம் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: ஷூட்டிங்கில் ஹாயாக இருந்த ரஜினி… ஒரே அழைப்பால் அலற விட்ட பிரபலம்..! சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?

நான் பழகும் நடிகர்களில் உரிமையுடன் அண்ணா என கூப்பிடக்கூடிய நடிகர் விஜய் மட்டும்தான் என்று பல நாள்கள் சுற்றிக் கொண்டிருந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் லோகேஷ்.

google news
Continue Reading

More in Cinema News

To Top