சிவகார்த்திகேயன் அவ்ளோ மோசமானவரா?.. ஏற்கனவே அந்த பிரபலம் எச்சரித்தாராமே.. இது தெரியாம போச்சே!..

by Saranya M |   ( Updated:2023-10-16 21:25:27  )
சிவகார்த்திகேயன் அவ்ளோ மோசமானவரா?.. ஏற்கனவே அந்த பிரபலம் எச்சரித்தாராமே.. இது தெரியாம போச்சே!..
X

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டார் என இசையமைப்பாளர் டி. இமான் பரபரப்பு பேட்டி அளித்திருப்பது தமிழ் சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மனங்கொத்தி பறவை படத்தில் தொடங்கிய நட்பு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை என பல படங்களில் இருவரும் இணைந்து பயணித்து தமிழ் சினிமாவுக்கு ஏகப்பட்ட தரமான பாடல்களை கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: நள்ளிரவில் லியோ நடத்திய சாதனை!.. அடேங்கப்பா ஒரே ரத்த களறியா இருக்கே.. பாக்ஸ் ஆபிஸ் பிச்சிக்கப்போகுது!..

ஒண்ணு மண்ணா பழகி வந்த இசையமைப்பாளருக்கு மறக்க முடியாத மன்னிக்க முடியாத துரோகத்தை சிவகார்த்திகேயன் செய்திருப்பதாக பேசியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

டி. இமானுக்கு சரியாக சம்பளம் வழங்காமல் சிவகார்த்திகேயன் ஏமாற்றி விட்டாரா? அல்லது வேறு என்ன வகையில் துரோகம் செய்தார் என பலரும் மண்டையை பிய்த்துக் கொண்டு பல யூகங்களை கிளப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: சல்மான் கான் அவ்ளோ உசுர கொடுத்து நடிச்சா!.. அத யாரு பார்க்குறா.. கத்ரீனா கைஃப் டவல் சீன் தான் செம வைரல்!..

இந்நிலையில், வலைப்பேச்சு அந்தணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”டி.இமான் என்ன சொல்ல வர்றாருன்னு புரியுதா? வலைப்பேச்சு-இந்த விஷயத்தை பலமுறை நாசுக்கா சொல்லியிருக்கு. இன்று அதையே தன் வாயால் உறுதி படுத்துகிறார் இமான். சில ஹீரோக்கள் நிஜ வாழ்வில் அக்மார்க் வில்லன்கள். அவ்வளவே!” என சிவகார்த்திகேயன் மட்டுமின்றி பல ஹீரோக்கள் நிஜ வாழ்க்கையில் வில்லன்களாக உள்ளனர் என்றும் சிவகார்த்திகேயன் செய்த தவறுகளை பல முறை மறைமுகமாக நாங்க சுட்டிக்காட்டியிருக்கோம் என்றும் பதிவிட்டுள்ளார்.

டி. இமானின் விவாகரத்துக்கே சிவகார்த்திகேயன் தான் காரணமா? என அந்தணன் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Next Story