பணத்துக்காக இவ்ளோ மலிவா போயிட்டாரே! சுத்த அயோக்கியத்தனம்.. இசைஞானிக்கு சவுக்கடி கொடுத்த பிரபலம்

by Rohini |   ( Updated:2024-05-09 02:03:32  )
ilai
X

ilai

Ilaiyaraja: சமீப காலமாக இளையராஜாவை பற்றிய பல சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிகையாளரான வலைப்பேச்சு பிஸ்மி இளையராஜாவை குறித்து அவருடைய கருத்தை பதிவிட்டு இருக்கிறார். அதாவது வயசு ஆக ஆக ஒரு மனிதனுடைய பக்குவம் என்பது அதிகமாகும். பணத்தின் மீது உள்ள ஆசை குறைவாகும்.

ஆனால் இளையராஜாவை பொருத்தவரைக்கும் அது உல்டாவாக மாறி இருக்கிறது. அவர் பணத்தின் மீது அதிக வெறியோடு இருக்கிறார். ஹார்மோனிய பெட்டியை தவிர்த்து கல்லாப் பெட்டியை தூக்கிக்கொண்டு அலைகிறார். அதுவும் கூலி படம் இன்னும் ரிலீசே ஆகவில்லை. இந்த ட்ரெய்லரில் அவருடைய வரிகளை பார்த்ததுமே உடனே புகார் கொடுக்கிறார் என்றால் பணத்தின் மீது அவர் எந்த அளவு வெறி பிடித்தவர் ஆக இருக்கிறார் என்பது நன்கு தெரிகிறது.

இதையும் படிங்க: எனக்கு சுயமரியாதை இருக்கு…கலங்கும் பாக்கியா.. பயத்தில் கோபி… கோபத்தில் ராதிகா…

அது மட்டுமல்லாமல் லோகேஷின் விக்ரம் படம் மற்றும் ஃபைட் கிளப் போன்ற படங்களிலும் தன்னுடைய பாட்டை பயன்படுத்தியதற்காகவும் புகார் கொடுத்து இருக்கிறார். ஃபைட் கிளப் படத்தை வேண்டும் என்றால் ஒப்புக்கொள்ளலாம். ஆனால் விக்ரம் படத்தில் உரிமை கொண்டாட இவருக்கு என்ன உரிமை இருக்கிறது?

என்பதுகளில் ரிலீசான விக்ரம் படத்தை கமல்தான் தயாரித்தார். இப்பொழுது ரிலீஸான விக்ரம் திரைப்படத்தையும் கமல் தான் தயாரித்தார். ஒரு தயாரிப்பாளர் என்கிற முறையில் அவருக்கு அந்தப் பாட்டை பயன்படுத்துவதற்கு உரிமை இருக்கிறது. அப்படி இருந்தும் கமலிடமும் சலுகையை எதிர்பார்க்கிறார் என்றால் இது ஒரு சுத்த அயோக்கியத்தனமாகவே இருக்கிறது. பணத்திற்காக இவ்வளவு மலிவாக போய்விட்டாரே இளையராஜா? ரொம்ப அருவருக்கத்தக்க செயல் என வலைப்பேச்சு பிஸ்மி கூ கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: இன்று வரை தன் படத்தையேப் பார்க்காத டி.ராஜேந்தர்… காதல் தோல்வி படத்திற்குப் பின் இப்படியும் ஒரு சோகமா..?

Next Story