வந்துடுச்சு வந்துடுச்சு தங்கலான் படம் ரிலீஸ் அப்டேட்... இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?
விக்ரம் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துடன் அசத்தலாக நடித்து வரும் படம் தங்கலான். இந்தப் படம் எப்போ வரும்? எப்போ வரும்னு காத்துக்கிட்டு இருந்த ரசிகர்களுக்கு படத்தோட ரிலீஸ் அப்டேட் சுடச்சுட வெளியாகி உள்ளது.
ஞானவேல் ராஜா தயாரிக்க, பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி மேனன் மற்றும் பசுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க... இதனாலதான் இவர் காலில் நான் விழுந்தேன்!. நடிகரிடம் சொன்ன கேப்டன் விஜயகாந்த்!..
ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். ஏ.கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தங்கலான் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே வரவேற்புக்குள்ளானது.
விக்ரம் இந்தப் படத்தைப் பற்றி பேசியது ஆச்சரியமாக உள்ளது. அதாவது பிதாமகன், ஐ, ராவணன் படங்கள் தான் நான் கஷ்டப்பட்டு நடித்தேன். ஆனால் தங்கலான் படத்தோடு அதை எல்லாம் அந்தப் படங்களோடு ஒப்பிடும்போது அதற்கு நான் பட்ட கஷ்டம் 3 சதவீதம் கூட இல்லை.
இந்தப் படத்திற்கு அந்த அளவு உடல் ரீதியாவும், மனரீதியாவும் கஷ்டப்பட்டேன். ஒவ்வொரு காட்சியும் அப்படித்தான் இருந்தது. காதலும் வெறித்தனம் தான்.
அந்தவகையில் இந்தப் படம் குறித்து ரஞ்சித் என்னிடம் சொல்லும்போதே ஆர்வமாக இருந்தது. இது எங்கள் வாழ்க்கையில் சிறந்த படமாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.
தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் சித்ரா லட்சுமணனிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 15ல் தங்கலான் படம் உறுதியாக வருது. ஞானவேல் சார் கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன். அவரு நமக்கு ஒரு நல்ல ப்ரீ ஸ்லாட் கிடைச்சிருக்கு. ஆகஸ்ட் 15ல தங்கலான் படத்தைக் கொண்டு வந்துடலாம்னு சொன்னாரு.
இதையும் படிங்க... ஆண்ட்டி ஆனாலும் சும்மா அள்ளுது!. தளதள உடம்பை காட்டி இழுக்கும் நயன்தாரா!…
இப்போ மொத்தப் படக்குழுவும் அதுக்கான வேலைகள்ல ஈடுபட்டுக்கிட்டு இருக்கோம். எந்த மாதிரி இந்தியா முழுவதும் புரொமோஷனைக் கொண்டு போகணும்? ஏன்னா ஒரு நாலைந்து மொழிகள்ல படத்தை வெளியிடப் போறோம். விக்ரம் சாரும் ரொம்பவே ஆர்வத்தோடு இருக்காருன்னும் அவர் சொன்னார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.