அப்பாவால மோசம் போன வரலட்சுமி! என்ன நாட்டாமை பொண்ணுக்கு ஒரு நல்ல தீர்ப்ப சொல்லலயே
Actress Varalakshmi: தமிழ் சினிமாவில் வரலட்சுமி ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழை விட தெலுங்கில் தான் அவருடைய ஆதிக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தெலுங்கில் பல சூப்பர் ஸ்டார்களுடன் வரலட்சுமி வில்லியாக நடித்து பெரிய பெரிய நடிகர்களுக்கே டப் கொடுக்கும் ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பொதுவாக சினிமாவை பொறுத்த வரைக்கும் வாரிசு நடிகர்கள் பெரும்பாலும் பெரிய அளவில் ஜொலிப்பதில்லை. ஆனால் வரலட்சுமி பொறுத்தவரைக்கும் அவருடைய தந்தை சரத்குமாரை தாண்டியும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவருடைய திடீர் நிச்சயதார்த்த நிகழ்வு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பட போஸ்டர்களை கிழிக்க சொன்ன ரஜினி!.. பதறிய தயாரிப்பாளர்!.. அப்படி என்ன கோபம்!..
ஏனெனில் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் நிக்கி என்பவர் ஒரு பெரிய பாடி பில்டர் போன்ற தோற்றத்தில் காணப்படுவதால் வரலட்சுமி அருகில் நிற்கும்போது ஒரு சிறு குழந்தையாக காணப்படுகிறார். அது மட்டும் இல்லாமல் அவருடைய வருங்கால கணவர் குறித்து பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அவருடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதும் அவருடைய வருங்கால கணவர் குறித்து பல செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.
அதாவது அவருடைய வருங்கால கணவரான நிக்கி ஒரு கடத்தல்காரராக இருப்பாரோ என்றெல்லாம் இணையத்தில் வைரலாகி வந்தன. அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக வரலட்சுமி அவருடைய பதிவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் அவருடைய இன்னொரு பதிவும் வைரலாகி இருக்கிறது.
இதையும் படிங்க: என்னது லியோ ஃபேக்கா? அஜித் வாழ்க்கை ஸ்டோரியே இங்க Fakeஆ இருக்கே… வைரல் வீடியோ!…
அதாவது என்னுடைய அப்பாவும் இரண்டு திருமணங்களை செய்தவர் தான். ஆனால் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். என் வருங்கால கணவரை குறித்து தவறாக பேசிக்கொண்டு வருகிறார்கள். அதைப் பற்றி எனக்கு ஒன்னும் கவலை இல்லை. அவர் எனக்கு மிகவும் அழகாக இருக்கிறார். அதனால் மற்றவர்கள் பேசுவதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்று மிக தைரியமாக அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.