கேப்டன் மில்லரில் நீ செஞ்சதே போதுமப்பா!... கோட் ஒளிப்பதிவாளரிடம் முட்டிக்கொள்ளும் வெங்கட்பிரபு

by Akhilan |   ( Updated:2024-02-01 12:20:26  )
கேப்டன் மில்லரில் நீ செஞ்சதே போதுமப்பா!... கோட் ஒளிப்பதிவாளரிடம் முட்டிக்கொள்ளும் வெங்கட்பிரபு
X

Venkat Prabhu: விஜய் நடிப்பில் பரபரப்பாக உருவாகி வரும் கோட் படத்தின் படப்பிடிப்புக்கு இடையே இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் ஒளிப்பதிவாளருக்கு இடையேயான பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படமாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் தி டைம் உருவாகி வருகிறது. விஜயை புதிய பரிணாமத்தில் காட்ட வெங்கட் பிரபு அதீத முயற்சி எடுத்து வருகிறார். லாஸ் ஏஞ்சல்ஸில் டீ ஏஜிங் பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில் யுவன் இசையில் பாடல்களும் பட்டையை கிளப்பும் என்கின்றனர்.

இதையும் படிங்க: கமல்-ஹெச்.வினோத் படத்தின் கதை முக்கிய பிரபலத்தின் பயோபிக்காம்!.. ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட்…

விரைவில் முதல் சிங்கிள் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பிரபுதேவா, விஜய், பிரசாந்த் இணைந்து ஒரு பாடலும் படமாக்கப்பட்டதாம். அடுத்தக்கட்ட ஷூட்டிங் தொடங்கி நடந்துவரும் நிலையில் ஒளிப்பதிவாளருக்கும், இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் முட்டிக்கொண்டதாம்.

கேப்டன் மில்லர் படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்த சித்தார்த் நுனி தான் கோட் படத்திலும் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ரொம்பவே கறாராக வேலை வாங்கிவிடுவாராம். அதாவது கேமராவுடன் ஒரு டீம் இருக்கும். அதில் ஒருவர் ஃபோகஸ் புல்லராக வேலை செய்வார். அதாவது கேமராவின் ஃபோகஸை செட் செய்து வைப்பார்.

இதையும் படிங்க: பதினாறு வயதினிலே படம் நடிக்கும்போது காதல் வசப்பட்ட கமல்!. நடிகர் சொன்ன சீக்ரெட்…

இதனால் 14 பேரை மாற்றி இருக்கிறாராம். இன்னும் பாதி ஷூட்டிங் இருக்க இவர் இன்னும் எத்தனை பேரை மாற்றுவார் என படக்குழு இப்போதே அச்சத்தில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் படப்பிடிப்பை மொத்தமாக முடித்து விட வேண்டும் என படக்குழு தீவிரமாக உழைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Next Story