ஆக்‌ஷன் சீன்ஸ் கொலமாஸ்!.. தளபதி 68-க்கு தரமான சம்பவம் பண்ணும் வெங்கட்பிரபு!..

by சிவா |
vijay
X

vijay

Thalapathy 68: மற்ற நடிகர்கள் போல ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் பல மாதங்கள் இடைவெளி விடாமல் உடனடியாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க துவங்கிவிட்டார் விஜய். வாரிசு படம் முடிந்த உடனேயே லியோ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

தற்போது லியோ படம் முடித்த கையோடு வெங்கட்பிரபு இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க துவங்கிவிட்டார் விஜய். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க அவரின் நண்பர்களாக பிரபுதேவா, பிரசாந்த், அஜமல் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், சினேகா, மீனாக்‌ஷி சவுத்ரி ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

இதையும் படிங்க: விஜய்க்கு செக் வைக்க அந்த படத்தை களத்தில் இறக்கும் சூர்யா குடும்பம்? பப்பு வேகுமா பாஸ்?..

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். குடும்ப செண்டிமெண்ட் மற்றும் ஆக்‌ஷன் கலந்த காமெடி திரைப்படமாக இந்த படம் உருவாகவுள்ளது. இது விஜயின் 68வது திரைப்படமாகும். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார்.

அப்பா மகனாக விஜய் நடிக்கும் இந்த படத்தில் மகன் விஜயை மிகவும் இளமையாக அதாவது 25 வருடங்களுக்கு முன்பு இருந்த விஜயை காட்டவிருக்கிறார்கள். அவரோடு சேர்த்து பிரசாந்தையும் இளமையாக காட்டவுள்ளனர். இதற்காக அமெரிக்காவில் ஹாலிவுட் படங்களுக்கு பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளனர்.

இதையும் படிங்க: விஜய் மிஸ் பண்ணத தட்டி தூக்கும் ரஜினி!.. தலைவர் 171-ல் பென்ச் மார்க் கிரியேட் பண்ணும் சூப்பர் ஸ்டார்..

மேலும், இப்படத்தில் 6 சண்டை காட்சிகள் இருக்கிறது. திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை அமைக்கவுள்ளார். 6 சண்டை காட்சிகளும் சும்மா தீயாக இருக்குமாம். இதில் ஒரு சண்டை காட்சியை தென் ஆப்பிரிக்காவில் படமாக்கவுள்ளனர். படத்தின் ஹலைட்டாக இந்த சண்டைக்காட்சி இருக்கும் என சொல்லப்படுகிறது.

இதற்காக விரைவில் சண்டைக்காட்சி நடிகர்களுடன் படக்குழு தென் ஆப்பிரிக்கா பறக்கவுள்ளது. அது முடிந்த பின் ஹாங்காங், தாய்லாந்து என பலவேறு இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார். மொத்தத்தில் இள வயது விஜய், பிரசாந்த், துள் கிளப்பும் சண்டை காட்சிகள் என விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்தையை வெங்கட்பிரபு வைக்கவுள்ளார் போல!..

இதையும் படிங்க: விஜய்க்கு லோகேஷ்னா அஜித்துக்கு இவர்தான்! அடுத்த பட இயக்குனரை தட்டி தூக்கிய அஜித் – சம்பளத்துல தல எகிறிட்டாரே

Next Story