ஒருவழியா சொல்லிட்டாங்கப்பா!. கோட் டிரெய்லர் வீடியோ எப்போது தெரியுமா?....

by சிவா |
goat
X

Goat Trailer: விஜய் இப்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் விஜய் அப்பா - மகன் என 2 கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இதில், மகன் விஜயை ஏஜிங் டெக்னாலஜி மூலம் மிகவும் இளமையாக காட்டியிருக்கிறார்கள்.

மங்காத்தா, மாநாடு போன்ற ஹிட் படங்களை கொடுத்த வெங்கட்பிரபுவுடன் விஜய் இணைந்ததால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. அஜித்துக்கு மங்காத்தா போல விஜய்க்கு இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் என பலரும் நடித்திருக்கிறார்கள்.

பல வருடங்களுக்கு பின் விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். அப்பா விஜய்க்கு சினேகாவும், மகன் விஜய்க்கு மீனாக்‌ஷி சவுத்ரியும் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தின் 3 பாடல்கள் வெளியானது. ஆனால், ரசிகர்களுக்கு அந்த பாடல்கள் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

goat

இதுபற்றி ஊடகம் ஒன்றில் பதில் சொன்ன வெங்கட்பிரபு ‘படம் வெளியான பின் பாடல்கள் ரசிகர்களுக்கு பிடிக்கும்’ என சொல்லி இருக்கிறார். மேலும், ரா அமைப்போடு தொடர்பு கொண்ட ஒரு குழு ஒரு விஷயத்தை செய்ய பின்னாளில் அது அவர்களுக்கு பிரச்சனையாக வருகிறது. அதை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை என சொல்லி இருக்கிறார்.

ஒருபக்கம் இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ எப்போதும் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. கடந்த 2 நாட்களாகவே ‘விரைவில் கோட் டிரெய்லர் அப்டேட்’ என மாறி மாறி சொல்லி வந்தனர். ஆனால், அப்டேட் வெளியாகவே இல்லை. இந்நிலையில்தான் இப்போது கோட் பட டிரெய்லர் வீடியோ பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

ஆகஸ்டு 17ம் தேதி மாலை 5 மணிக்கு கோட் படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகும் என வெங்கட்பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சுனைனா மீது அவ்ளோ ஆசை!.. காண்டம் வாங்கிட்டு வர சொன்னாரு நகுல்!.. இயக்குனர் பகீர் பேட்டி!…

Next Story