1965ம் வருடம் முதல் தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் வெண்ணிறாடை மூர்த்தி. ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானதால் அந்த படத்தின் பெயர் அவரின் பெயருக்கு முன்னால் சேர்ந்து கொண்டது
., துவக்கத்திலிருந்தே காமெடி நடிகராக மட்டுமே நடித்தார் வெண்ணிற ஆடை மூர்த்தி. மகேந்திரன் இயக்கிய முள்ளும் பலரும் போன்ற சில படங்களில் மட்டும் வேறு மாதிரியான கதை பாத்திரங்களில் நடித்திருந்தார்.
வெண்ணிறாடை மூர்த்தி ஒரு சிறந்த நடிகர் என்றாலும் அவரின் திறமையை நிரூபித்து காட்டுவது போல அவருக்கு கதாபாத்திரங்கள் அமையவில்லை.. எனவே தொடர்ந்து காமெடி வேடங்களில் மட்டுமே நடித்தார்.
டபுள் மீனிங் பேசி பேசி காமெடி செய்வது இவரின் டிரேட்மார்க். இவரை போல டபுள் மீனிங் பேசி யாராலும் நடிக்க முடியாது என ரசிகர்களே சொல்வார்கள்.

நடிகர் என்பதைத் தாண்டி வெண்ணிறாடை மூர்த்தி ஒரு சிறந்த ஜோசியர் என்பது பலருக்கும் தெரியாது. ஜெயலலிதாவுடன் ஒரு படத்தில் நடித்த போது ‘நீங்கள் எதிர்காலத்தில் மக்கள் போற்றும் ஒரு பெரிய மக்கள் தலைவராக வருவீர்கள்’ என முதன் முதலில் சொன்னது மூர்த்திதான். அதனால்தான் முதல்வரான பின் ஜெயலலிதா மூர்த்தியை நேரில் வரவழைத்து கூட பேசினார். அவருக்கு பல உதவிகளையும் செய்ய முன்வந்தார். ஆனால், மூர்த்தி அதை ஏற்கவில்லை. உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதுவே போதும் என சொல்லிவிட்டார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய வெண்ணிறாடை மூர்த்தி ‘சிவாஜி சாருக்கு ஜாதகம் பார்த்து ‘உங்களுக்கு அரசு வேலை கிடைக்கும்’ என சொன்னேன்.. சொன்ன மாதிரியே அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்தது.. ரஜினி சார் ஜாதகத்தை பார்த்து ‘நீங்க தமிழ்ல பெரிய ஆளா வருவீங்க.. சூப்பர் ஸ்டார் ஆவீங்க.. ஹிந்தி வாய்ப்புகள் வரும்.. ஆனால் நிக்காது’ என்று சொன்னேன்.. அதுதான் நடந்தது.. நான் சொன்னது எல்லாமே பலிச்சது என சொல்ல மாட்டேன்.. நடிகை மனோரமாவுக்கு நான் சொன்ன எதுவுமே பலிக்கவில்லை.. அவங்க ஜாதகம் தப்பா இருக்கலாம்.. அல்லது நான் சொன்னது தப்பா இருக்கலாம்’ என்று பேசியிருக்கிறார்.



