Categories: latest news

லிங்குசாமிக்காக யாரும் செய்யாததை செய்த வெற்றிமாறன்! இதைவிட என்ன வேணும்?

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் தொடங்கி விடுதலை வரைக்கும் அவர் எடுத்த ஒவ்வொரு படத்திற்குள்ளும் ஒரு ஆழமான கருத்துக்கள் இருக்கின்றன. சமூக அக்கறையுள்ள கருத்தை படத்தின் மூலம் சொல்லி மக்களை ஒரு சமூக சிந்தனை உள்ள மனிதர்களாக மாற்றும் முயற்சியில் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் இவர்களுடன் வெற்றி மாறனும் இப்போது இணைந்து இருக்கிறார்.

அதுவும் நாவல்களை படமாக எடுப்பதில் மிகச்சிறந்த இயக்குனராக திகழ்ந்து வருகிறார் வெற்றிமாறன். இப்போது விடுதலை இரண்டாம் பாகம் தயாராகிக் கொண்டு வருகிறது. அந்த படத்திற்கு பிறகு சூர்யாவுடன் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் இணைய இருக்கிறார் வெற்றிமாறன்.

இதையும் படிங்க: மதுரை முத்துவை இதுவரை யாரும் இந்த கோலத்தில் பார்த்திருக்க மாட்டீங்க! வைரலாகும் வீடியோ

இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி வெற்றிமாறனை பற்றி ஒரு தகவலை பகிர்ந்திருந்தார். அதாவது வெற்றிமாறனை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெற்றிமாறன் அதை செய்ய மாட்டார். கூடிய சீக்கிரம் நடிக்க வந்தால் அதுவும் நன்றாக இருக்கும் என கூறினார்.

மேலும் பொல்லாதவன் படத்தின் போதே லிங்குசாமி ‘என் ப்ரொடக்ஷனில் ஒரு படம் எடுக்க வேண்டும் என வெற்றிமாறன் ஒரு ஸ்கிரிப்ட் எடுத்து வந்தார். ஆனால் அந்த நேரத்தில் அது முடியாமல் போய்விட்டது’ எனக் கூறினார். ஆனால் இதை லிங்குசாமி மறந்து விட்டாராம்.

இதையும் படிங்க:இசையா மொழியா என்பதல்ல விஷயம்… இது அதையும் தாண்டி… கேட்டுப்பாருங்க… சும்மா ‘ஜிவ்’வுன்னு இருக்கும்..!

சமீபத்திய ஒரு சந்திப்பில் வெற்றிமாறன் இதை லிங்குசாமியிடம் கூறி ஞாபகம் படுத்தி இருக்கிறார். அதுவும் இப்போது லிங்குசாமியின் நிலை என்ன என்பது தமிழ் சினிமாவிற்கே தெரியும். அதனால் வெற்றிமாறன் அவராக முன் வந்து நான் உங்கள் ப்ரொடக்ஷனில் ஒரு படம் எடுத்தால் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக உங்களுக்காக ஒரு படம் நான் எடுத்து தருகிறேன் என கூறி இருக்கிறாராம்.

இதைக் குறிப்பிட்டு சொல்லும் போது லிங்குசாமி ‘வெற்றிமாறன் இடத்தில் நான் இருந்தால் கூட இதை நான் சொல்லி இருப்பேனா என எனக்கு தெரியாது. அந்த அளவுக்கு நல்லவனா என்பதும் எனக்கு தெரியாது. ஆனால் வெற்றிமாறன் இதை சொன்னது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. அவர் இயக்கத்தில் படங்களில் நடிக்க தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி சினிமாக்களிலும் நடிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்’ என லிங்குசாமி கூறினார்.

இதையும் படிங்க: அப்போ ஷகீலா சொன்னது பொய்யா? உண்மையில் நடந்தது என்ன? திணறும் பயில்வான்

Rohini

Recent Posts

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

13 minutes ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

3 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

16 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

16 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

17 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

18 hours ago