வாடிவாசலுக்கு தேதி குறித்த வெற்றிமாறன்!.. ஐயோ பாவம் சூர்யா!.. எத்தனை வருஷம் ஆகுமோ!..

Published on: May 14, 2024
---Advertisement---

சூர்யா ரசிகர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம்தான் வாடிவாசல். அதற்கு காரணம் அப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன். வெற்றிமாறன் இயக்கும் ஒவ்வொரு படமும் தரமான படைப்புகளாக இருப்பதால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஆனால், இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி 3 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. கலைப்புலி தாணு தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியானது. அதோடு சரி. அதன்பின் எந்த அப்டேட்டும் இல்லை. ஒருபக்கம் வெற்றிமாறன் விடுதலை படம் இயக்க போய்விட்டார்.

Also Read

இதையும் படிங்க: ‘வாடிவாசல்’ படத்தில் தன்னுடைய கேரக்டரை உறுதிசெய்த அமீர்! இங்கேயும் சண்டைதானா?

சூர்யாவோ சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடிக்க போய்விட்டார். அதேபோல், விடுதலை முடித்து இப்போது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இது எப்போது முடியும் என தெரியவில்லை. ஒருபக்கம், சூர்யா சுதாகொங்கராவோடு புறநானுறு, கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் ஒரு படம் என அறிவிப்புகள் வெளியானது.

ஆனால், புறநானூறு படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என சூர்யா விரும்புவதால் அது இப்போதைக்கு இல்லை. எனவே, கார்த்திக் சுப்பாராஜின் படம் விரைவில் துவங்கவிருக்கிறது. ஒருபக்கம், வாடிவாசல் படத்தில் அமீருக்கு முக்கிய வேடம் இருப்பதால் அதில் சூர்யா நடிப்பாரா என்கிற சந்தேகமும் பலருக்கும் இருந்தது.

vadivasal

 

அவர் நடிக்கவில்லை எனில் வேறுநடிகரை வைத்து வாடிவாசலை வெற்றிமாறன் எடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் எடுப்பது உறுதி எனவும், வருகிற செப்டம்பர் மாதம் இப்படத்தின் வேலைகள் துவங்கும் எனவும் இப்போது செய்திகள் கசிந்திருக்கிறது.

அதோடு, இப்படத்திற்காக 2 வருடங்கள் படப்பிடிப்பை நடத்த வெற்றிமாறன் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இது அவருக்கு பழகிய ஒன்றுதான். விடுதலை படத்தை துவங்கி இப்போது அதன் 2ம் பாகத்தை உருவாக்கி வருகிறார். அதேபோல், வாடிவாசல் படத்தையும் 3 வருடங்கள் எடுத்தால் சூர்யா என்ன ஆவார் என்பது தெரியவில்லை. ஏற்கனவே கங்குவா படத்தால் 2 வருடங்கள் சூர்யா எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.