More
Categories: Cinema News latest news

வெற்றிமாறனின் அடுத்த 7 படங்கள்!. தரமான சம்பவம் பண்ண காத்திருக்கும் தளபதி விஜய்…

Director Vetrimaran: இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் வெற்றிமாறன். பொல்லாதவன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பைக்கை தொலைத்துவிட்டு தேடும் ஒரு இளைஞனின் கதையை சினிமாவாக எடுத்திருந்தார். இந்த படம் திரையுலகினரையே ஆச்சர்யப்படுத்தியது.

தனுஷுக்கும் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிப்பது பிடித்துபோனதால் தொடர்ந்து ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய படங்களில் நடித்தார். இதில் ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய படங்களுக்கு தனுஷ் தேசிய விருதும் பெற்றார். இந்த படங்கள் மட்டுமில்லாமல் விசாரணை, விடுதலை ஆகிய படங்களையும் வெற்றிமாறன் இயக்கினார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: தளபதி விஜயை காப்பாற்றி வரும் கவுண்டமணி!.. அவர் மட்டும் இல்லனா!.. விஜயே பகிர்ந்த சீக்ரெட்..

தமிழ் சினிமாவில் இப்போதிருக்கும் ஒரு மிகச்சிறந்த இயக்குனர்களில் வெற்றிமாறனும் ஒருவர், நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பது போல வெற்றிமாறனுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். காமெடி நடிகராக இருந்த சூரியை ஹீரோவாக்கி விடுதலை என்கிற படத்தை எடுத்தார். இந்த படமும் வெற்றியடைந்ததால் சூரி இப்போது தொடர்ந்து ஹீரோவாக நடிக்க துவங்கிவிட்டார்.

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் மட்டும்தான் ‘இவர் அடுத்து என்ன படம் எடுக்க போகிறார்?.. யாரை வைத்து இயக்க போகிறார்?’ என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும். அப்படிப்பட்ட ஒருவர்தான் வெற்றிமாறன். இயக்கம் மட்டுமல்ல. தயாரிப்பாளராக சில படங்களை தயாரித்திருக்கிறார். இவரின் சில கதைகளை மற்ற இயக்குனர்கள் படமாக இயக்கியுள்ளனர்.

இதையும் படிங்க: துணிவு படத்தில் அந்த காட்சியில் நடித்தது அஜித்தே இல்லையாம்!.. என்னப்பா சொல்றீங்க!..

வெற்றிமாறன் அடுத்தடுத்து இயக்கவுள்ள திரைப்படங்கள் பற்றித்தான் இங்கே பார்க்கபோகிறோம். இப்போது சூரி – விஜய் சேதுபதி நடித்துவரும் விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். சூர்யாவை வைத்து இவர் இயக்கவுள்ள வாடிவாசல் படமும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை துவங்கியுள்ளது. சூர்யா கங்குவா படத்தை முடித்த பின் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து மீண்டும் தனுஷை வைத்து வட சென்னை 2 படத்தை எடுக்கவுள்ளார். அதேபோல், பேரரறிவாளனை சட்டப்போராட்டம் நடத்தி மீட்ட அற்புதம்மாள் பற்றியும் ஒரு படத்தை வெற்றிமாறன் எடுக்கவுள்ளார். அதேபோல், ஜூனியர் என்.டி.ஆரை வைத்து தெலுங்கு மற்றும் தமிழில் ஒரு படத்தையும் வெற்றிமாறன் இயக்க திட்டமிட்டுள்ளார். இது எல்லாவற்றையும் விட இவரின் இயக்கத்தில் நடிக்க விஜயும் விரும்புகிறார். அவருக்காகவும் ஒரு கதையை வெற்றிமாறன் உருவாக்கி வருகிறாராம். மேலும், பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கரின் பயோகிராபியையும் வெற்றிமாறன் படமாக எடுக்கவுள்ளார்.

கதை உருவாகும் விதம், நடிகர்களின் கால்ஷீட் ஆகியவற்றை வைத்து எந்த கதையை இயக்குவார் என வெற்றிமாறன் முடிவு செய்வார் எனத்தெரிகிறது.

இதையும் படிங்க: ஒரு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிய எம்.ஜி.ஆர்!. கோடிகளை குவித்த எவர்கிரீன் சூப்பர் ஹிட் படம்!..

Published by
சிவா

Recent Posts