இதுக்கு எதுக்கு யூடர்ன் பண்ணி?.. டேபிளை உடைச்சி!.. ஹாலிவுட் படத்தை ஆட்டய போட்ட விடாமுயற்சி டீம்!
ஹாலிவுட் படங்களின் கதையை சுட்டு தமிழுக்கு ஏற்றது போல் கொஞ்சம் மாற்றி பட்டி டிங்கரிங் செய்து திரைப்படமாக எடுப்பது என்பது எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே இருக்கிறது. எம்.ஜி.ஆர் நடித்த அன்பே வா, அடிமைப்பெண் உள்ளிட்ட பல படங்களில் ஹாலிவுட்டில் இருந்து சுட்டதுதான்.
பல ஜேம்ஸ்பாண்ட் கதைகளை சுட்டு இங்கே ஜெய்சங்கர் நடித்திருக்கிறார். அதானல்தான் அவருக்கு தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என்கிற பெயரும் கிடைத்தது. இங்கே நமது இயக்குனர்கள் என்ன யோசித்தாலும் அதை விட டபுள் மடங்காக பல வருடங்களுக்கு முன்பே யோசித்து ஒரு இயக்குனர் படம் எடுத்திருப்பார்.
இதையும் படிங்க: உச்ச நடிகரை வில்லானாக்கும் தனி ஒருவன் 2.. ரவிக்கு செம டஃப்பா இருக்குமே..!
ஆங்கில படங்கள் மட்டுமில்லை, ஜப்பான், கொரியன், உருது, இத்தாலி, பிரெஞ்சு, சீனா ஆகிய மொழி படங்களிலிருந்தும் பல காட்சிகளை கோலிவுட் இயக்குனர்கள் சுட்டு தங்களின் படங்களில் வைப்பதுண்டு. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படமே ஒரு ஆங்கில படத்தின் பாதிப்பிலிருந்து எடுத்ததுதான்.
இப்போது விடாமுயற்சி படமும் ஒரு ஆங்கில படத்திலிருந்துதான் உருவாக்கி வருகின்றனர். ஜாலியாக சுற்றுலா செல்கிறது ஒரு ஜோடி. அங்கு கதாநாயகியை வில்லன் குரூப் கடத்துகிறது. ஹீரோ தனது காதலியை எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை. விடாமுயற்சியில் இதை கணவன் - மனைவியாக மாற்றிவிட்டனர். அஜித் எப்படி திரிஷாவை மீட்கிறார் என்பதுதான் விடாமுயற்சி படத்தின் கதை என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: குறி வச்சா இரை விழணும்!. வெளியான வீடியோ.. ‘வேட்டையன்‘ என்ன மாதிரியான படம் தெரியுமா?…
இதுபோன்ற கதையில் பல ஹாலிவுட் படங்கள் வந்திருக்கிறது. லியாம் நீசன் நடித்த டேக்கன், டேக்கன் 2, டேக்கன் 3 ஆகிய படங்களின் கதையும் இதுதான். மனைவியை, மகளை என ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொருத்தரை கடத்துவார்கள். ஹீரோ போய் அவர்களை மீட்டுக்கொண்டு வருவார்.
மகிழ் திருமேனியே நன்றாக கதை எழுதுவார். ஆனால், அஜித் உள்ளே புகுந்து ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு படமெடுக்கலாம் என துவங்கி முதலில் ஒரு ஹாலிவுட் படத்தின் லைனை பிடித்து கதையை உருவாக்கினார்கள். அதில், அஜித்துக்கு திருப்தி இல்லாமல் போக, மகிழ் திருமேனியே ஒரு கதையை உருவாக்கினார். இதுவும் அஜித்து பிடிக்கவில்லை. அதன் பின்னரே மகிழ் திருமேனி ஒரு ஹாலிவுட் படத்தின் ஒரு வரிக்கதையை சொல்ல அஜித் ஓகே சொல்லிவிட்டார். அதுதான் இப்போது விடாமுயற்சி படமாக உருவாகி வருகிறது.
இதையும் படிங்க: அல்லக்கைகள் செய்த அட்டூழியங்கள்! மக்களின் கோபத்தை சம்பாதித்த விஜய், நயன்தாரா