மே 1ல் பெரிய ட்ரீட்தான்.. அஜித் அனுமதிக்காக காத்திருக்கும் ‘விடாமுயற்சி’ டீம்! அதாவது நடக்குமா?

Published on: April 27, 2024
ajith
---Advertisement---

Vidamuyarchi: விடாமுயற்சி வருமா வராதா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கி விட்டன. அஜித்தின் படத்தை பொறுத்த வரைக்கும் அப்டேட் அப்டேட் என்று ஏங்கும் ரசிகர்கள் இந்த படத்தில் மட்டும் அப்டேட்டை பற்றி கேட்கவே இல்லை. ஏனெனில் விடாமுயற்சி படத்தில் இருக்கும் பிரச்சனை பெரும்பாலும் ரசிகர்களுக்கு தெரிந்து விட்டது.

அதனால் இந்த முறை விடாமுயற்சி பற்றிய அப்டேட்டை பெரிதாக அவர்கள் நினைக்கவில்லை. தேர்தலுக்குப் பிறகு இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக அஜித் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்ற தகவல் முன்பே வெளியானது. ஆனால் இதுவரை ஒட்டு மொத்த டீமும் படப்பிடிப்பிற்காக தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் யாரும் ஷூட்டிங்கிற்கு செல்லவில்லை என்பதுதான் உண்மை.

இதையும் படிங்க: விஜய் நடிக்க வேண்டிய படம்.. சிம்புவை வைத்து களமிறங்கும் இயக்குனர்! இது புது அப்டேட்டால இருக்கு

ஏற்கனவே வெளியான தகவலின் படி விடாமுயற்சி படத்தின் சூட்டிங் இன்றிலிருந்து ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அனைவரும் தயாராக இருக்கும் நிலையில் படப்பிடிப்பு மட்டும் ஆரம்பிக்கப்படவில்லை. அதற்கு காரணம் லைக்காவிடம் இருந்து இன்னும் பச்சைக்கொடி காட்டப்படவில்லை என பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறி இருக்கிறார்.

லைக்கா நிறுவனம் தான் இதற்கு ஒரு சரியான தீர்வை கொடுக்க வேண்டும் என்றும் தனஞ்செயன் கூறினார். அதே வேளையில் மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாள் என்பதால் கண்டிப்பாக விடாமுயற்சி படத்தின் ஏதாவது ஒரு அப்டேட் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் படக்குழு இருக்கிறது. அதனால் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட தயாராக இருக்கிறதாம். அதற்காக போஸ்டர் எல்லாம் ரெடியாகிவிட்டதாகவும் தனஞ்செயன் கூறினார்.

இதையும் படிங்க: விஜய் ஸ்டைலில் வெளியான கவினின் ஸ்டார் ட்ரைலர்… அடுத்த ஹிட் கன்பார்ம் தான் போல…

இருந்தாலும் அஜித்திடமிருந்து இதுவரை எந்த ஒரு அனுமதியும் கிடைக்கவில்லையாம். அவர் ஓகே சொன்ன பிறகுதான் விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருக்கிறார்கள் என தனஞ்செயன் கூறினார். ஆனால் லைக்கா நிறுவனம் இந்த முறை ஒரு இக்கட்டான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருப்பதாக தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அதனால் தெரிந்த வட்டாரங்களில் எல்லாம் நிதி உதவி பெற்ற பிறகு விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று ஒரு பேச்சு அடிபட்டு கொண்டு வருகிறது.

இதற்கிடையில் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து ஆதிக் ரவுச்சந்திரனின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பும் தாமதமாகுவதால் ஒரே நேரத்தில் எப்படி அஜித் இரண்டு படங்களிலும் கவனம் செலுத்துவார் என்று தெரியவில்லை. இருந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: இப்படி தலைப்பு வச்சா படம் ஓடாது!.. விஜய்க்கு இப்படி ஒரு ராசி இருக்கு!.. பொங்கும் பிரபலம்…