Cinema History
வருஷத்துல எனக்கு இப்படி ஒரு பாட்டு கிடைச்சா போதும்யா!.. எஸ்.பி.பி.யை நெகிழ வைத்த பாடல் எது தெரியுமா?
இசை அமைப்பாளர்களில் வித்யாசாகர் தவிர்க்க முடியாதவர். அவரது இசையில் உருவான பல பாடல்கள் செம மாஸானவை. இவற்றைப் பற்றி திரை இசை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா…
வித்யாசாகர் இசைக்குடும்பத்தில் பிறந்தவர். இசைக்கருவிகளை அருமையாக வாசிப்பதில் வல்லவர். எஸ்.ஏ.ராஜ்குமாரிடமும் உதவியாக இருந்துள்ளார். சின்னப்பூவே மெல்லப்பேசு படத்தில் அவருக்கு உதவியாளராக இருந்தாராம்.
ஆரம்பத்தில் கே.வி.மகாதேவன் பாடலைக் கொடுத்ததும் தான் மெட்டுப் போடுவார். அதே போல பாடல்களுக்கு இசை அமைக்க மிகவும் விருப்பப்பட்டவர் வித்யாசாகர். எம்எஸ்வி. காலகட்டத்தில் மெட்டுக்குப் பாட்டு எழுதுவார் கவிஞர். இளையராஜா காலகட்டத்தில் மெட்டுப் போடுவார். அதைக் கேசட்டில் ரெகார்ட் செய்து விட்டுப் போவார்கள். அதற்கேற்றவாறு வரிகளை எழுதுவார்கள். வித்யாசாகரிடம் தமிழ்ப்புலமை அதிகம். அவர் பாடலாசிரியரிடம் நல்லா வேலை வாங்குவார்.
இசை அமைப்பாளருக்கு மொழி கைவரணும். பாடலாசிரியருக்கு இசை கைவரணும். இரண்டும் சரியாக இருந்தால் அருமையான பாடல் கிடைக்கும். அந்த வகையில் வித்தியாசாகரின் பாடல் தனித்துவமாக இருக்கக் காரணமே இதுதான்.
90களில் அர்ஜூனுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார். மலரே மௌனமா பாடல் எல்லாம் வேர்ல்டு கிளாசிக். இந்தப் பாடலைப் பாடியதும் எஸ்.பி.பி ‘வருஷத்துல இப்படி எனக்கு ஒரு பாட்டு கிடைச்சா போதும்யா’ன்னு சொன்னாராம். அப்படி சொல்லும் போது வித்யாசாகரின் கையைப் பிடித்துக்கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாராம்.
95ல் வெளியான படம் கர்ணா. இந்தப் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்துள்ளார். படத்தில் வித்யாசாகர் அருமையான மெலடி பாடல் ஒன்றைக் கொடுத்து இருப்பார். அதுதான் மலரே மௌனமா என்ற பாடல். இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியனும், எஸ்.ஜானகியும் பாடியுள்ளனர். அவ்வளவு அருமையான மெலடி காதல் பாடல் என்றால் அது இதுதான். இப்போது கேட்டாலும் நம்மை மெலிதாக வருடும் தென்றலைப் போன்ற இதமான உணர்வைத் தரும் இந்தப் பாடல்.