விக்னேஷ் சிவன் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுக்க வைத்தது இந்த முன்னணி நடிகர் தானா?
Vignesh Shivan: இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இருவருக்கும் காதல் பிறந்த சுவாரசிய கதை குறித்த ஆச்சரிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் பெரிய பிரச்சினைகளை சந்தித்து வந்த நயன் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை சரியாக ஆடி வந்தார். அந்த சமயத்தில் அவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் புகைப்படத்தை கசிய விட்டே தங்கள் காதலை உறுதிப்படுத்தினர்.
இதையும் படிங்க: தட்டப்போராறாம் தூக்கி… ஷூட்டிங் மட்டும்தான் பாக்கி.. தலைவரை வச்சு தெறிக்க விடப்போறாராம் லோக்கி!..
சரியாக நயன்தாரா கேரியரில் உச்சத்தை அடைந்து கொண்டிருந்தார். அதே வேலையில் விக்னேஷ் சிவனும் தொடர்ச்சியாக திரைப்படங்களை இயக்கி வந்தார். ஒருகட்டத்தில் ஜூன் 2022 ஆம் ஆண்டு தடாலடியாக இருவரும் நெருக்கமான உறவுகளுக்கும் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அதே வருடத்தில் நான்கே மாத இடைவெளியில் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் பிள்ளைகளுக்கு தாயானார் நயன்தாரா. அதுவரை நிறைய பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே சந்தித்து வந்த நயனுக்கு சிக்கலகள் தொடங்கியது. வாடகை தாய் விஷயம் சர்ச்சையானது. நடித்த திரைப்படங்களும் வரிசையாக தோல்வியில் முடிந்தது. இதை சரிக்கட்ட தொடர்ச்சியாக புதுபுது பிசினஸ்களையும் தொடங்கினார்.
அங்கும் தேவையில்லாத விளம்பரங்களால் பல்ப் வாங்கினார். இன்ஸ்டாவில் எண்ட்ரியாகி அதற்கும் காசு பார்த்தார். இது ஒரு புறம் இருக்க நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இடையே விவகாரத்து ஆக இருப்பதாக சர்ச்சைகள் வெளியானது. தற்போது இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தம்பதியாக இணைந்து ஒரு பேட்டியை கொடுத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: எலேய் இருங்கப்பா… யாரு இதுல ஹீரோ, ஹீரோயின்… முத்து, மீனாவா? ஸ்ருதி, ரவியா? குழப்பமா இருக்கே!
அதில் விக்னேஷ் சிவன் தனக்கும் நயன்தாராவுக்கும் ஆன முதல் சந்திப்பு கொடுத்து சில தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகிய நானும் ரவுடிதான் திரைப்படத்திற்கு நாயகி தேடல் நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் நடிகர் தனுஷ் தான் நயனை போய் பார்த்து கதை சொல்லுமாறு கூறியிருக்கிறார். கதையை கேட்ட நயன்தாரா உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.
அதுவரை நடிப்பதாக முடிவு சொல்லாமல் இருந்த விஜய் சேதுபதி, நயன் நடிக்கிறார் என கூறியதுடன் தானும் இந்த படத்தில் நடிப்பதாக ஓகே சொல்லினார் என விக்னேஷ் சிவன் குறிப்பிட்டு இருக்கிறார். அப்போ தனுஷ் தான் காதலுக்கு குபிட்டா எனவும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோபிக்கு ஆளுக்கு ஆள் டயலாக் விடுறாங்களே… என்னங்க இது அநியாயமா இருக்கே…பாவமில்ல அவரு!