முதல் சந்திப்பிலேயே விக்கியை ஃபிளாட் ஆக்கிய நயன்!.. அப்படி என்ன நடந்துச்சி தெரியுமா?...
Nayanthara: நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியபோது அப்படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அதன்பின் இருவரும் சில வருடங்கள் காதல் ஜோடிகளாக வலம் வந்தனர்.
திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக இருந்த விக்கி - நயன் இருவரும் லிவ்விங் டூ கெதரில் இருந்து வந்தனர். பிறந்தநாளை கொண்டாடுவது, புது வருடத்தை வெளிநாட்டில் கொண்டாடுவது, அடிக்கடி வெளிநாட்டுக்கு போய் ஜாலியாக ஊர் சுற்றுவது என டேட்டிங் செய்து வந்தனர். அந்த புகைப்படங்களை விக்கி சமூகவலைத்தளங்களில் வெளியிட்டும் வந்தார்.
இதையும் படிங்க: கோடியை மட்டும் சுருட்ட தெரியுது! எங்க நிலைமையையும் யோசிங்க நயன் – பரிதவிக்கும் படக்குழு
கடந்த வருடம் இருவரின் திருமணமும் நடைபெற்றது. இதில், திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு இருவருக்கும் வாழ்த்து கூறினர். அதன்பின் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராக மாறினார். திருமணத்திற்கு பின்னரும் நயன்தாரா சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் படம் உருவானபோது நயனை சந்தித்து பேசியது உள்ளிட்ட பல அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். தனுஷ் சார்தான் இப்படத்தின் தயாரிப்பாளர். அவர்தான் நயன்தாராவை சந்தித்து கதை சொல்ல சொன்னார்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமே சும்மா தெறிக்குது!.. சட்டை பட்டனை கழட்டி ஷார்ப்பா காட்டும் நயன்தாரா!..
எப்படியும் அவர் சம்மதிக்க மாட்டர் என நினைத்தே அவருக்கு கதை சொல்லப்போனேன். அவரின் வீட்டிற்கு போனதும் என்னை உட்காரவைத்துவிட்டு முதலில் அவரின் செல்போனை ஆப் செய்தார். அதுவே எனக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. ஏனெனில், பெரும்பாலானோர் அதை செய்ய மாட்டார்கள். முதல் சந்திப்பிலேயே அவரை எனக்கு பிடித்துப்போனது.
நானும் ரவுடிதான் படம் உருவானபோது எனக்கும் ,அவருக்கும் சின்ன சின்ன சண்டைகளும் வரும். ஆனால், இருவருக்கும் நல்ல புரிதல் இருந்தது. அதுவே காதலாகவும் மாறியது’ என விக்னேஷ் சிவன் பேசியுள்ளார்.