தற்போது சமூக வலைதளங்களில் விக்னேஷ் சிவன் கொடுத்து வரும் பேட்டி வைரலாகி வருகின்றது. அதுவும் அஜித்தை பற்றி அவர் கூறிய பல செய்திகள் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகி வருகிறது. ஏற்கனவே துணிவு படத்திற்கு பிறகு அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. அதற்காக ஸ்கிரிப்ட் வேலைகளிலும் விக்னேஷ் சிவன் இறங்கினார் .
ஆனால் அவருடைய ஸ்கிரிப்ட் தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்கவில்லை .அதனாலையே அஜித்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு தள்ளி போய்க்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் ப்ரொடக்ஷன் தரப்பிலிருந்து விக்னேஷ் சிவனுக்கு நெருக்கடி அதிகமாக அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகினார். அதன் பிறகு தான் மகிழ் திருமேனி உள்ளே வந்து இப்போது அந்த படம் விடாமுயற்சியாக உருவெடுத்திருக்கிறது.
இதையும் படிங்க: ‘கிளைமாக்ஸ் புடிக்கல’.. சூப்பர் படத்தை ‘மிஸ்’ பண்ணிய விஜய்..
விடாமுயற்சியின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு ரெஸ்பான்ஸை பெற்று வருகிறது. இந்த நிலையில் தான் அஜித்தை பற்றி விக்னேஷ் சிவன் சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார் .அதாவது என்னை அறிந்தால் படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடல் எழுதி இருந்தாராம். அப்பொழுதுதான் அஜித்தை முதல் முறையாக விக்னேஷ் சிவன் சந்தித்திருக்கிறார்.
அந்த நேரத்தில் அஜித் விக்னேஷ்சிவனிடம் ‘நானும் ரவுடிதான் படத்தை நான் பலமுறை பார்த்து ரசித்தேன். அந்த படத்தில் குறிப்பாக பார்த்திபன் கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதே மாதிரி ஒரு கேரக்டரில் நாம் சேர்ந்து படம் பண்ணலாம்’ என கூறினாராம். இந்த ஒரு பேட்டியை பார்த்ததிலிருந்து விக்னேஷ் சிவன் ரசிகர்களிடம் சிக்கி சின்னா பின்னமாகி வருகிறார் .
இதையும் படிங்க: அந்த விஷயத்துல நான் கமல் சாரை விட பெஸ்ட்!.. இப்படி சொல்லிட்டாரே மிர்ச்சி சிவா!..
அதாவது என்னை அறிந்தால் திரைப்படம் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. நானும் ரவுடிதான் திரைப்படம் அதே 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியானது .ஆனால் விக்னேஷ் சிவன் சொன்னதை பார்க்கும் பொழுது அக்டோபர் மாதத்தில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தை எப்படி பிப்ரவரி மாதத்தில் அஜித் பார்த்திருக்க முடியும். இது அது எப்படி திமங்கலம் காமெடியாக இருக்கிறது என விக்னேஷ் சிவனை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
தனுஷ் முதன்…
விஜய் தமிழக…
அண்ணா யாரு…
புரட்சித்தலைவர் எம்ஜிஆர்…
கண்ணதாசன் அர்த்தமுள்ள…