அட்லீ செயலால் நெட்டிசன்களிடம் அசிங்கப்படும் தளபதி… காண்டான ரசிகர்கள்

Published on: September 23, 2022
அட்லீ
---Advertisement---

தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லீ. சில படங்கள் எடுத்தாலும் முன்னணி இயக்குனர் லிஸ்ட்டில் இருப்பவர். இவர் தற்போது விஜயுடன் பதிவிட்ட ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அட்லீ மற்றும் தளபதியின் பாண்டிங் சினிமா உலகிற்கு புதிது இல்லை. ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் அட்லீ. நண்பன் படத்தில் பணிபுரியும் போதே விஜய் மற்றும் அட்லீ நடிப்பு தொடர்ந்து வளர்ந்ததாக கூறப்படுகிறது.

அட்லீ இயக்குனராக அறிமுகமான படம் ராஜா ராணி. ஆர்யா, ஜெய், நயன் மற்றும் நஸ்ரியா முக்கிய வேடம் ஏற்று இருந்தனர். படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. ஒரு பக்கம் அட்லீ காப்பி கேட் என்று ஒரு சிலர் விமர்சனம் செய்தனர். ராஜா ராணி படம் மௌன ராகம் படத்தின் காப்பி என்றனர். இருந்தும் படம் நல்ல வசூலை பெற்றது. அட்லீக்கும் இயக்குனராக அப்ளாஸ் கிடைத்தது.

அட்லீ

இந்த வெற்றியுடன் அவர் சென்றது விஜயிடம் தான். மெர்சல் படத்தின் மூலம் இந்த காம்போ இணைந்தது. இப்படத்திலும் அவரை காப்பி கேட் என்றே விமர்சித்தனர். ஆனால் படம் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்றது. படமும் பாக்ஸ் ஆபிஸ் வசூல். விஜய், தொடர்ந்து அட்லீக்கு வாய்ப்பு கொடுத்தார்.

அடுத்து, தெறி படத்தை இயக்கினார் அட்லீ. மீனாவின் மகள் நைனிகா மற்றும் விஜய் நடித்திருந்தனர். படம் விஜய் சினிமா வாழ்க்கையிலேயே மைல்கல்லாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல், விஜயின் மகள் திவ்யாவை நடிக்க வைத்ததும் அட்லீ தான். இரண்டு படங்கள் போதும் என ரசிகர்கள் கூறி வந்தனர்.

இருந்தும் விஜய் அட்லீயை நம்பினார். தொடர்ந்து, மூன்றாவது படத்தினையும் அவருக்கு கொடுத்தார். கால்பந்து வீரர்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக அமைந்தது பிகில். விஜயுடன் இளம் நடிகைகளுக்கும் இப்படத்தில் முக்கியத்துவம் தரப்பட்டது. படம் வெற்றியை பெற்றது.

தொடர்ந்து, கோலிவுட்டில் லீவ் எடுத்துக்கொண்டார் அட்லீ. பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து படம் இயக்க இருப்பதாக அறிவித்தார். இப்படத்திற்கு ‘ஜவான்’ என பெயரிடப்பட்டுள்ளது. நாயகியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். பரபரப்பாக படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அட்லீ தனது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். அதற்கு ஒரு பார்ட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்வில் விஜயும் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது விஜய், அட்லீ மற்றும் ஷாருக் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இதையும் படிங்க: அஜித்தும் விஜய்யும் ரகசியமாக சந்தித்துக் கொள்கிறார்களா?!!

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.