அந்த விமர்சனத்தால் நடிக்கவே மாட்டேன்னு சொன்ன விஜய்... அப்புறம் காட்டிய அதிரடியைப் பாருங்க..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இவரது படம் வந்தாலே பிரபலமாகி விடும். அவர் வேறு யாருமல்ல. இயக்குனர் எஸ்ஏ.சந்திரசேகர் தான். இவரது மனைவி ஷோபா சந்திரசேகர். இவர் ஒரு பாடகி. இவர்களோட மகன் தான் தளபதி விஜய்.

இவருக்கு 18 வயசு இருக்கும்போதே சினிமாவில் ஹீரோவாக நடிக்க வந்துவிட்டார். 10வது வயதில் குழந்தை நட்சத்திரமாக வெற்றி என்ற படத்தில் நடித்தார். பிறகு நான் சிகப்பு மனிதன் என்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடித்தார்.

1992ல் தான் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அப்போது அவருக்கு 18வயது. இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ட் செய்தார். அவரது அம்மா தயாரித்தார். படத்தின் பெயர் நாளைய தீர்ப்பு.

Also read: ஜோதிகா, சூர்யாவுக்கே இந்தப் பிரச்சனைங்கறாங்க… என்ன சொல்கிறார் பிரபலம்?

அந்தப் படமோ பிளாப் ஆகி விட்டது. ஆனால் அப்போது ஒரு பிரபல பத்திரிகை ஒன்றின் முகப்பு அட்டையில் இதெல்லாம் ஒரு மூஞ்சி... இதை நாங்க காசு கொடுத்துப் பார்க்கணுமான்னு கிண்டலாகப் போட்டுருந்தாங்க.

அதைப் படித்த விஜய் நான் இனிமேல் நடிக்கவே மாட்டேன்னு சொல்லிவிட்டார். 1996ல் அவர் நடித்த படம் பூவே உனக்காக. நாளைய தீர்ப்பு படத்தில் பார்த்த விஜயா இப்படி நடித்துள்ளார் என வியக்காதவர்களே இல்லை.

அவரை யாரெல்லாம் விமர்சனம் செய்தார்களோ அவருக்கு எல்லாம் விஜய் பதிலடி கொடுத்தார். படம் சக்கை போடு போட்டது. தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்தார். தெலுங்குப் படத்திலும் நடிக்க ஆரம்பித்தார். ஒக்கடு படத்தின் ரீமேக்கில் நடிக்கத் தொடங்கினார். அதுவரை லவ் பாயாக பார்த்த விஜய் திடீரென மாஸ் ஹீரோவானார். ரஜினிக்குப் பிறகு 50 கோடி கலெக்ஷனை அள்ளியது இவர் தான்.

thuppakki

thuppakki

'வாழ்க்கைங்கறது வட்டம்டா. இதுல மேல இருக்குறவன் கீழே வருவான். கீழே இருக்குறவன் மேல போவான்'னு ஒரு பஞ்ச் டயலாக் தன் படம் ஒன்றில் சொல்வார். அது போலவே அவரது வாழ்க்கையிலும் நடந்தது. அவரது 50வது படம் பிளாப். இனி படம் நடிக்க மாட்டாருன்னு சொன்னாங்க. விஜய் படம்னாலே ஒரே மாதிரி தான் இருக்கும்னும் சொன்னாங்க.

ஆனால் இந்திய சினிமா உலகையே திரும்பிப்ப பார்க்க வைத்தது 2012ல் வெளியான துப்பாக்கி படம். தமிழ்சினிமாவில் 100 கோடி வசூல் சாதனை படைத்த முதல் படம் இது தான். தொடர்ந்து 2024 வரை வெறித்தனமான வெற்றிகளைக் குவித்து வருகிறார்.

இளையதளபதி தளபதியானார். இதுதான் உண்மையான பழி வாங்கும் படலம். நாம் செய்ய வேண்டியதை செய்து கொண்டே இருந்தால் நமக்குக் கிடைக்க வேண்டியது கண்டிப்பாகக் கிடைக்கும். அதற்குச் சரியான உதாரணம் தான் தளபதி விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல், சினிமா என இரட்டைக் குதிரைகளில் சவாரி செய்து வருகிறார் தளபதி விஜய். இவர் இந்த இடத்தைப் பிடிப்பதற்கு முன் எவ்வளவு கஷ்டப்பட்டாருன்னு பார்க்கலாமா...

Related Articles
Next Story
Share it