எஸ்.ஏ.சி-விஜய் மோதல் இந்த படத்தில் தொடங்கியது தானா? முக்கிய காரணமான சங்கீதா…
SAC-Vijay: நடிகர் விஜயை தொடக்கத்தில் தூக்கி வைத்த தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது பிரச்னை மேலும் அதிகப்படுத்தி வைத்து இருக்கிறார். இருவருக்கும் மோதல் இருப்பது பலருக்கு தெரிந்தாலும் பொது மேடை வரை விஷயம் வந்துவிட்டது.
சமீபத்தில் நடந்த தேசிங்கு ராஜா நிகழ்ச்சியில் லியோ படத்தினை ஓபனாகவே விமர்சித்தார். இதனால் பலரும் விஜயை கலாய்க்கும் நிலை உருவாகியது. ஒரே மகனான விஜய் நடிக்க ஆசைப்பட்ட போது முதலில் தயங்கினாலும் கிட்டத்தட்ட 7 படம் வரை இயக்கியவர் எஸ்.ஏ. சந்திரசேகர் தான்.
இதையும் படிங்க: முதல் சிங்கிள் ஷாட் ஹீரோவாக சிவாஜி மாறியது இப்படித்தான்!.. நடிகர் திலகம்னா சும்மாவா!
அதுமட்டுமல்லாமல், பல இயக்குனர்களிடம் விஜயை வைத்து படம் இயக்குமாறு கேட்டுக்கொண்டே இருப்பார். போட்டி நாயகர்களை காலி செய்ய தனியாக வேலை பார்த்தார். கிட்டத்தட்ட துப்பாக்கி படம் வரை விஜயின் படங்களுக்கு கதை கேட்டது முதல் சம்பளம் முடிவு செய்வது வரை எஸ்.ஏ.சியின் வேலையாக இருந்தது.
ஆனால் இது விஜயின் மனைவி சங்கீதாவுக்கு நெருடலாக இருந்ததாம். நீங்களே கதை கேட்டு ஓகே செய்யலாமே என விஜயிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அதை ஏற்றுக்கொள்ளும் விஜய் ஒரு முடிவு எடுத்து இருக்கிறார். அந்த நேரத்தில் விஜய் ஒரு இயக்குனரை ஓகே செய்ய, எஸ்.ஏ.சியும் ஒரு இயக்குனரை ஃபிக்ஸ் செய்கிறார்.
இதையும் படிங்க: இனிமே நான் நடிக்க மாட்டேன்!.. சிவாஜி படத்தின் படப்பிடிப்பிலிருந்து வெளியேறிய பானுமதி…
ஒரு கட்டத்தில் அவர் கதை சொல்ல தொடங்க இவர் அதுக்கு ஒரு எதிர்கதையை சொல்லி வெறுப்பேற்றி விடுகிறார். இதனால் அப்போது பீக்கில் இருந்த முருகதாஸ் எழுந்து சென்றுவிடுகிறார். நேராக விஜயிடம் சென்றவர். இது சரியாக வராது சார் எனவும் கூறவிடுகிறார். அதில் கடுப்பான விஜய் நான் சொன்னா சரியா தான் இருக்கும். இவர் தான் இயக்குனர் என ஃபிக்ஸ் செய்ய வேண்டா வெறுப்பாக ஓகே சொல்கிறார் எஸ்.ஏ.சி.
துப்பாக்கி முடிந்து ஆடியோ ரிலீஸில் இதை மேடையில் பேசி விஜய், முருகதாஸை சங்கடமும் செய்து இருந்தாராம். இந்த நிகழ்வில் இருந்தே விஜய் மற்றும் அவர் தந்தைக்கு இடையே விரிசல் விழுந்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் இன்று வரை இருவருக்கும் சுமூகமான நிலை உருவாகவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே பழக்கத்தில் எதையும் மேடையில் உடைத்து பேசுகிறேன் என எஸ்.ஏ.சி செய்வது விஜயிற்கு பெரிய அளவில் சங்கடத்தினை கொடுத்து இருக்கிறது.
இதையும் படிங்க: ரைட்டு… அடுத்ததா? தளபதி69ஐ இயக்க போவது இந்த இயக்குனரா? ஆனா நடக்குமா?