கடந்த மாதம் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது மூத்த மகள் மீரா தற்கொலை செய்து கொண்டு வீட்டிலேயே உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உடைந்து போய் என் மகளுடன் நானும் இறந்து விட்டேன் என ட்விட்டரில் போஸ்ட் ஒன்றை போட்டு ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார்.
இதற்கு மேல், விஜய் ஆண்டனி சினிமா பக்கம் மீண்டு வரவே பல காலம் ஆகும் என பலரும் எண்ணிய நிலையில், மகள் இறந்து 10 நாள் கூட ஆகாத நிலையில், தன்னை நம்பி பணம் போட்டு படம் எடுத்த தயாரிப்பாளருக்கும் அந்த படத்தை நம்பி பல ஆண்டுகளாக காத்திருக்கும் இயக்குனருக்கும் தன்னால் கேடு விளையக் கூடாது என நினைத்து தனது இளைய மகள் லாராவுடன் பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: டிரெய்லரை இத்தனை தடவை பார்த்தாரா? லோகேஷுடன் சேர்ந்து குலுங்கி குலுங்கி சிரித்த விஜய்- அப்படி என்னவா இருக்கும்?
அக்டோபர் 6ம் தேதி வெளியான விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அடுத்த அறிவிப்பாக மீண்டும் தனது இசை கச்சேரியை தமிழ்நாட்டில் பல இடங்களில் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார் விஜய் ஆண்டனி.
இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் 2ம் தேதி கோவையில் ஒரு இசை கச்சேரி நிகழ்ச்சியும், டிசம்பர் 16ம் தேதி பெங்களூரில் ஒரு இசை கச்சேரியும், சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி ஒரு இசை கச்சேரி நிகழ்ச்சியையும் நடத்தப் போவதாக சந்தோஷத்துடன் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அன்பறிவு படத்தில் லோகேஷ் ஹீரோ இல்ல… இந்த ஸ்டார் தானாம்? தேவையா இதெல்லாம்..!
ஏ.ஆர். ரஹ்மான் இசை கச்சேரி நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிக்கு பிறகு லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவே ரத்தான நிலையில், விஜய் ஆண்டனி செம தில்லாக அடுத்தடுத்து பல இசை கச்சேரியை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 14…
Vijay tv:…
Rj Balaji:…
விமர்சனம் செய்வது…
விஜய் அக்டோபர்…