ரஜினியின் Jailer 2வுடன் மோத வேண்டாமென முடிவெடுத்த விஜய் ஆண்டனி!
ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படம் வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகிறது.

‘நூறு சாமி’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அப்பா குட்டி’. இந்த படத்தை இயக்குநர் மு.மாறன் இயக்கியுள்ளார்.
இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் பகவதி பெருமாள், மதன், ஹரிப்ரியா, முத்துக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
முதலில் இந்த படத்தை வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். இதுக்கு ஒரு நாள் முன்னாடி தான் நம்ம ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படமும் ரிலீஸ் ஆகவுள்ளது.

தற்போது, ‘அப்பா குட்டி’ படத்தின் ரிலீஸ் தேதியை விஜய் ஆண்டனி ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம்.




