Connect with us

Cinema News

பிச்சைக்காரர்களுக்கு செம விருந்து!… கெத்து காட்டிய விஜய் ஆண்டனி…

சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து தற்சமயம் நடிகராகி இருப்பவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக இருந்தபோதே அவர் இசையமைத்த பாடல்கள் பலவும் பெரும் ஹிட் கொடுத்தன.

சினிமாவிற்கு அறிமுகமானதும் சுக்ரன் மற்றும் டிஸ்யூம் ஆகிய இரு படங்களுக்கு அவர் இசையமைத்தார். டிஸ்யூம் படத்தின் பாடல்கள் எல்லாம் அப்போது பெரும் ஹிட் கொடுத்தன. அதன் பிறகு படிப்படியாக நடிக்க துவங்கினார்.

அவர் நடிப்பில் வெளியான நான் திரைப்படம் பட்டி தொட்டியெங்கும் வரவேற்பை பெற்றது. இப்படி இசை, நடிப்பு இரண்டிலையுமே எண்ட்ரி ஆனப்போதே ஹிட் கொடுத்து எண்ட்ரி ஆனவர் விஜய் ஆண்டனி. அவர் நடித்த படங்களில் சலீம், பிச்சைக்காரன், திமிரு பிடிச்சவன், கொலைக்காரன் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

பிச்சைக்காரன் திரைப்படத்தை இயக்குனர் சசி இயக்கினார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை தற்சமயம் விஜய் சேதுபதியே இயக்கி நடித்தார். மேலும் இந்த படத்தை அவரே தயாரித்தார்.

பிச்சைக்காரன் 2 திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழை விட தெலுங்கில் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் பிச்சைக்காரர்களை அழைத்து சென்று அவர்களுக்கு விருந்து வைத்துள்ளார் விஜய் ஆண்டனி.

பிரியாணி விருந்து வைத்து அவர்களுக்கு குளிர்பானங்கள், ஐஸ்கீரிம் எல்லாம் வழங்கி பயங்கர சொகுசான விருந்தை வழங்கியுள்ளார். இதை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விஜய் ஆண்டனி.

அந்த வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்

 

google news
Continue Reading

More in Cinema News

To Top